பேரறிவாளர்
பேரறிவாளர் என்பவர் அறிவில் சிறந்தவர் என்பதாகும்.
மேற்கோள்கள்
தொகு- பேரறிவு இடைவிடாத கவனத்தின் மூலம் அமைவதைத் தவிர வேறில்லை. - ஹெல்விடியஸ்[1]
- பேரறிவு என்பது எனக்குத் தெரியாது; அது உழைப்பும் ஊக்கமுமேயாகும். - ஹோகார்த்[1]
- பேரறிவாளர் தமக்கு வேண்டிய பாதைகளைத் தாமே அமைத்துக் கொள்வர். தமக்கு வேண்டிய தீபத்தையும் தாமே எடுத்துச் செல்வர். - வில்மா[1]
- பேரறிவாளர் பிறவியிலேயே அப்படியிருப்பவர் அவர்களைப் போதனை செய்து தயாரிக்க முடியாது. - டிரைடன்[1]
- அறிவைப் பெற்றுக்கொண்டு. அதை அபிவிருத்தி செய்து கொள்வதே பேரறிவாளனின் திறமை. ஜி. எலியா[1]