பெருந்தீனி
அளவுக்கு அதிகமாக உண்ணுதல்
பெருந்தீனி (Gluttony) என்பது தேவைக்கும் அதிகமாக உண்ணுதல் ஆகும். இது குறித்த மேற்கோள்கள்
- உண்பதைத் தவிர வேறு இன்பமேயில்லாதவர்கள் தாங்கள் உயிர் வாழ்வதன் காரணம், அது ஒன்றுதான் என்று கூறலாம். - ஜூவினல்[1]
- சில மனிதர்கள் விருந்துண்ணவே பிறந்தவர்கள். போராடுவதற்காக அன்று. போர்க்களத்திலே கூட ஊக்கமில்லாத அவர்கள் உள்ளங்களில் சாப்பாட்டைப்பற்றியே நினைவிருக்கும்.[1]
- சமையலறைதான் அவர்களுடைய ஆலயம் சமையற்காரனே அவர்களுடைய பூசாரி, உணவுண்ணும் மேசையே அவர்கள் பலி பீடம் வயிறே அவர்களுடைய கடவுள். - பக்[1]
- பெருந்தீனிதான் நம் குறைபாடுகளுக்கெல்லாம் காரணம் நம் பிணிகளுக்கெல்லாம் அடிப்படை - பர்ட்டன்[1]
- வயிற்றுக்கு அடிமையாயுள்ளவன் கடவுளைத் தொழுதல் அரிது. - ஸா அதி[1]