- யானைக்கும் அடி சறுக்கும்.
- நொண்டி குதிரைக்கு சறுக்குனது சாக்காம்.
- அடி மேல் அடி அடிச்சா அம்மியும் நகரும்.
- அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்.
- ஒருவனின் கடைசி பயணம் அவனின் மரணம்.
- மனைவியையும், புத்தகங்களையும் இரவலாகக் கொடுக்காதே! போனால் திரும்பி வராது
- நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை.
- வல்லான் வகுத்ததே வாய்க்கால்
- பொம்பள சிரிச்சா போச்சு
- சாண் பிள்ளைன்னாலும் ஆண் பிள்ளை
- மூர்த்தி சிறுசுன்னாலும் கீர்த்தி பெருசு.
- ஒன்னும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு போட்டாளாம் தாப்பா.
- பூனை கண்ணை மூடிகிட்டா உலகமே இருண்டு போச்சுன்னு நினைச்சுக்குமாம்.
- கடைசி நிமிடம் என்றொரு விடயம் மட்டும் இல்லாதிருந்தால், என்னால் எந்த வேலையையுமே செய்ய இயலாது.
- முட்டாளோடு வாதம் செய்யாதே, யார் முட்டாள் என்று பார்ப்பவருக்குத் தெரியாது.
- புத்தகங்களைக் கடனாகக் கொடுப்பவன் முட்டாள். கடனாக வாங்கிய புத்தகத்தைத் திரும்பத் தருவன் அவனை விட பெரிய முட்டாள்.
- சருகைக் கண்டு தணல் அஞ்சுமா