புறநானூற்றுப் பொன்மொழிகள்

1__நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்_____இரும்பிடர்த்தலையர்

2_பிறர்க்கு நன்மை செய்தல் இயலாவிடினும் தீமை செய்யாது இருங்கள்_அதுவே மக்களை நல்வழிப்படுத்தும்.

__நரிவெருவுத்தலையார்


3__யாதும் ஊரே யாவரும் கேளிர்

_______கணியன் பூங்குன்றனார்

4__தீதும் நன்றும் பிறர் தர வாரா.

_____கணியன் பூங்குன்றனார்

4___கிடைத்தற்கரிய உணவான அமிழ்தமே கிடைத்தாலும்கூட அதனைப் பிறரோடு பகிர்ந்து உண்.

____ _இளம்பெருவழுதி

5__மக்களை வருத்தாமல் வரி வாங்குகன்ற முறைமை வேண்டும். மிகச் சிறிய நிலம் ஆனாலும்கூட அதில் விளைந்த நெற்கதிர்களைக் குற்றி அரிசியாக்கி பின் அவற்றைச் சோறு ஆக்கி சிறு சிறு கவளமாக உருட்டி யானைக்கு உணவாக அளித்தால் மிகச்சிறு நிலத்தில் விளைந்த நெல் யானைக்கு பல நாள்களுக்கு உணவாகும்

அவ்வாறன்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரி வசூலிக்கலாம் என்கின்ற நிலை ஒரு நாட்டில் உருவானால் அது எப்படிப்பட்டது எனில் நன்றாக முற்றிய நெற்கதிர்கள் விளைந்துள்ள நூறு வேலி எனும் பெரும் நிலப்பரப்பே ஆயினும் யானை தனக்குரிய உணவை தானே உண்டுகொள்ளட்டும் என்று அனுமதித்தால் யானை உணவாக உட்கொள்கின்ற நெற்கதிர்களை விடவும் அதன் காலில் மிதிபட்டு அழிகின்ற நெற்கதிர்களே மிகுதியானதாகயிருக்கும்.

______பிசிராந்தையார்


இன்னும் தொடரும்