புன்மையான உணர்ச்சிகள்

புன்மையான உணர்ச்சிகள் என்பது சிறுமையான, இழிவான உணர்ச்சிகள் ஆகும். இது குறித்த மேற்கோள்கள்

  • காதலுக்கும் காமத்திற்குமுள்ள வேற்றுமை அதிகம்; காதல் நிலைத்திருப்பது மற்றது ஆவியாகப் போய்விடுவது. அனுபவக்தினால் காதல் வளரும் காமம் நலிவடையும். காரணம் என்னவென்றால், ஒன்றில் ஆன்மாக்கள் இணைகின்றன. மற்றதில் புலனுணர்ச்சிகளே இணைகின்றன. - பென்[1]
  • புன்மையான உணர்ச்சி பணத்திற்குக் கேடு ஆளுக்கு எதிரி; மனத்திற்கு விரோதம் மனச்சாட்சியை அரிப்பது அறிவுக்குப் பலவீனம்: புலன்களை மயக்குவது உடல் அனைத்திற்குமே தீயது - பிளினி[1]
  • ஒரு பகைவனுக்கு அன்பு காட்டினால் அவன் உன் நண்பனாவான். ஆனால், புன்மையான உணர்ச்சி அப்படியல்ல. அதற்கு உபகாரம் செய்யச் செய்ய அதன் பகைமை அதிகரிக்கும். - ஸா அதி[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 276-277. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=புன்மையான_உணர்ச்சிகள்&oldid=34931" இலிருந்து மீள்விக்கப்பட்டது