பிள்ளை
பிறந்ததிலிருந்து வாலிபப் பருவம் வரை உள்ள மனிதன்.
பிள்ளை அல்லது குழந்தைப் பருவம் என்ற சொல் பொதுவாக, மனிதரில் பிறப்புக்கும், பருவம் அடைவதற்கும் இடைப்பட்ட இளம் வயதினரைக் குறிக்கும். இது ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் பொதுவான பெயராக இருக்கிறது.
குழந்தைகள் குறித்த மேற்கோள்கள்
தொகு- குழந்தைகளுக்குக் கதைகளைக் கதைகளாகச் சொல்லிக் கொடுங்கள், புராணங்களை புராணங்களாகச் சொல்லிக் கொடுங்கள், ஒருபோதும் அவற்றை உண்மை என்று சொல்லிக் கொடுக்காதீர்கள்.- ஹைபேஷா
- குழந்தைகளுக்கு மனிதாபிமானத்தைக் கற்றுக் கொடுங்கள், அதுதான் இந்த அற்புதமான உலகைக் காப்பாற்றும். -ஆலிஸ் வாக்கர்
- கட்டளைகளைவிட வழிகாட்டுதலும், அக்கறையும்தான் குழந்தைக்குத் தேவை. ஆன் சல்லிவன் (ஹெலன் கெல்லரின் ஆசிரியர்)
- கணிதத்தைப் பார்த்து ஏன் குழந்தைகள் அஞ்சுகிறார்கள், ஏனென்றால் அதை ஒரு பாடமாக தவறான விதத்தில் அதை அணுகுவதால்தான். - சகுந்தலா தேவி (கணித மேதை)
- உங்கள் குழந்தையுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல அன்பையும், சிரத்தையையும் எப்படி காட்டுகிறீர்கள் என்பதே முக்கியம். - மார்கரெட் தாட்சார்
- கடவுள் உலகத்துக்கு அளித்த அழகான பரிசு குழந்தை. - அன்னை தெரசா
- பொறுப்புகளும் சுதந்திரத்திற்கான இறக்கைகளும்தான் நாம் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய உன்னதமான பரிசுகள். மரியா மாண்டிசேரி (கல்வியாளர்)[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016, 11, 20