பின்லந்து பழமொழிகள்

இப்பக்கத்தில் பின்லந்து பழமொழிகள் தொகுப்பகட்டுள்ளன.

  • ஏழை மனைவிக்கு எத்தனையோ இன்னல்கள் : அழுகின்ற குழந்தைகள், ஈர விறகு, ஓட்டைப் பானை, கோபமுள்ள கணவன்.
  • ஏழை வீட்டில் பெண் எடு, செல்வர் வீட்டில் குதிரை வாங்கு
  • ஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்க ஆணுக்குப் போதிய நேரம் இருக்கிறது.
  • காதல் என்பது மலர், கலியாணத்தில் அது கனியாகும்.
  • காதல் நந்தவனம், கலியாணம் முட்புதர்.
  • குழந்தையும் உதவிதான் செய்கிறது, ஒரு மீனைக் கழுவுவதற்குள், இரண்டு மீன்களைத் தின்னுகின்றது.
  • மனிதன் வேலை காரணமாக வெளியே போகிறான், பெண் தன்னைப் பிறர் பார்ப்பதற்காகப் போகிறாள்.
  • மூடன் தன் குதிரையைப் புகழ்வான், பயித்தியக்காரன் தன் மருமகளைப் புகழ்வான், அறியாதவன் தன் மகளைப் புகழ்வான்.
  • வெள்ளாட்டின் வெண்ணையும், பெண்டாட்டி சொத்தும் வீட்டுக்கு வேண்டாம்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பின்லந்து_பழமொழிகள்&oldid=37632" இருந்து மீள்விக்கப்பட்டது