பாவ்லோ பிரையர்
பிரேசிலியக் கல்வியாளர், மெய்யியலாளர் (1921–1997)
பாவ்லோ பிரையர் (Paulo Freire, பிறப்பு: செப்டம்பர் 19, 1921, இறப்பு: மே 2 1997) ஒரு பிரேசிலியக் கல்வியாளர், மெய்யியலாளர். கற்பிக்கும் கலையில் நுண்ணாய்வுத் திறனுடன் பல புத்தகங்கள் எழுதியுள்ளர். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கானக் கல்வி முறை என்கிற புத்தகம் அவரது சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இப்புத்தகமே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை இயக்கத்தின் அடித்தளமாகவும் அமைந்தது.
மேற்கோள்கள்
தொகு- மிருகங்கள் உலகில் உள்ளன. மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான்.[1]
- விமர்சனப்பூர்வமானப் பார்வையின் விளைவாக மனிதன் எல்லாவற்றையும் நேற்று, இன்று, நாளை என்கிற முப்பரிமாணக் காலத்தில் வைத்துப் பார்க்கிறான்.[1]
- செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காத சொற்களைப் பேசுவதும் மௌனம்தான்.[1]
- உலகை மாற்றி அமைப்பது என்பது ஒரு சில மனிதர்களின் தனி உரிமையல்ல; ஒட்டுமொத்தச் சமூக உரிமை. ஒருவருக்கான சொல்லை இன்னொருவர் தேர்வு செய்வதென்பதோ பேசுவதென்பதோ சாத்தியமல்ல.[1]
வெளி இணைப்புகள்
தொகு
- Digital Library Paulo Freire (Pt-Br)
- Pedagogy of the Oppressed by Paulo Freire
- PopEd Toolkit - Exercises/Links inspired by Freire's work
- Interview with Maria Araújo Freire on her marriage to Paulo Freire
- Interview excerpt with Paulo Freire on liberation theology and Marx
- A dialogue with Paulo Freire and Ira Shor (1988)
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 'பாவ்லோ பிரெய்ரோ சொல்வதென்ன?' - அ.மார்க்ஸ்