பாரதிதாசன்

தமிழ் இந்திய எழுத்தாளர் (1891-1964)
(பாவேந்தர் பாரதிதாசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர்.

மேற்கோள்கள்

தொகு

தமிழுக்கும் அமுதென்று பேர்!- அந்தத்

தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்!- இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நேர்!

தமிழுக்கு மணமென்று பேர்!- இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்!- இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்கு பால்!- இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!- இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!- இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!- இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

என்னுடைய சிந்தனை

தொகு
  1. "நான் செய்யவேண்டியது என்னவென்பதுதான் என்னுடைய சிந்தனையே தவிரப் பிறர் என்ன எண்ணுவார்கள் என்பதல்ல"[1]

பொதுவுடமை

தொகு

"ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!"2

குறிப்பு:2. "உலகப்பன் பாட்டு",பாரதிதாசன் கவிதைகள்,5-ஆம் பதிப்பு (இராமச்சந்திரபுரம்:செந்தமிழ் நிலையம்,1950)ப.148.

மனிதம்

தொகு

"அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!

விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை"3

3.மேலது, ப.150

பாட்டு

தொகு
  • நன்றாக அமைந்த பாடல் தன் கருத்துப்படி மனிதனைத் திருப்புகிறது. இதுதான் பாட்டினிடத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மேன்மை. [2]

மேற்கோள்:04

தொகு

"உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்

ஒவ்வொரு துளியிலும் கண்டேன்

இவ்வுல குழைப்பவர்க் குரிய தென்பதையே!"4

4. மேலது, ப.154.

மேற்கோள்:05

தொகு

"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட

போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்"5

5. மேலது, ப.158.

மேற்கோள்:06.

தொகு

"பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என்கின்றீரோ?

மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணிணத்தை?"6

6.மேலது, ப.03.

மேற்கோள்:07

தொகு

"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே"7

7.மேலது, ப.03

மேற்கோள்:08

தொகு

"ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்

ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு"8

8. மேலது, ப.03

மேற்கோள்:09

தொகு

"கடைக்கண் பார்வைதனை

கன்னியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரருக்கு

மாமலையும் ஓர் கடுகாம்."9

9. மேலது, ப.04.

மேற்கோள்:10

தொகு

"வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால்

சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்"10

10. மேலது, ப.06.

மேற்கோள்:11

தொகு

"உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால்

எள்ளை அசைக்க இயலாது"11

11. மேலது, ப.14.

மேற்கோள்:12

தொகு

"சாதலெனில் இருவருமே சாதல் வேண்டும்

தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்"12

12. மேலது, ப.30

மேற்கோள்:13

தொகு

"ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்

உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்"13

13. மேலது, ப.33.

மேற்கோள்:14

தொகு

"சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும்

சிறிய கதை! நமக்கெல்லாம் உயிரின்வாதை!"14

14. மேலது, ப.34

மேற்கோள்:15

தொகு

"எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால்

இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்"15

15. மேலது, ப.95

மேற்கோள்:16

தொகு

"எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்

தலைமுறைகள் பலகழித்தோம், குறைகளைந்தோ மில்லை!"16

16. மேலது, ப.95

மேற்கோள்:17

தொகு

"வெள்ளம்போல் தமிழர்கூட்டம் வீரங்கொள் கூட்டம்! அன்னார்

உள்ளத்தால் ஒருவரே! மற்றுஉடலினால் பலராய்க் காண்பார்"17

17. மேலது, ப.98

சான்றடைவு

தொகு
  1. குறிப்பு: 1.பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி,புதுச்சேரி: பாரதிதாசன் பதிப்பகம்,1952,ஆசிரியரைப்பற்றி:ப.v1.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பாரதிதாசன்&oldid=36880" இலிருந்து மீள்விக்கப்பட்டது