பால கங்காதர திலகர்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak சூலை 23, 1856 –1 ஆகத்து 1920) ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார்.

பால கங்காதர திலகர்

மேற்கோள்கள்

தொகு
  • ஆறாண்டுகளுக்குப் பிறகு நான் என் தாய்நாட்டிற்கு வந்து வெளி உலகத்தில் அறிமுகம் கொள்ளலானேன். உலகத்தையே நான் மறந்துவிடவும், உலகமே என்ன மறந்து விடும்படியுமான எண்ணத்தைக் கொண்டு அதிகாரிகள் என்னை வெளி உலகத்தொடர்பின்றி தனியே வைத்திருந்தார்கள். ஆனால் நான் மக்களை மறக்கவில்லை. மக்களும் என்னை மறக்கவில்லை. ஆறு வருடகாலம் நான் மக்களைப் பிரிந்திருந்தாலும் அவர்களிடத்தே உண்டான அன்பு எனக்கு எள்ளளவும் மாறாது. ஆறு வருடகாலத்திற்கு முன் அன்னோன்னியத்துடனும் உணர்ச்சியுடனும் எங்ஙனம் எந்த அந்தஸ்துடன் நான் உழைத்து வந்தேனோ அவ்வண்ணமே மீண்டும் உழைக்க நான் சித்தமாயிருக்கிறேன். ஆனால், காலத்தையறிந்து, என் வழியைச்சற்று மாற்றிக் கொள்ள வேண்டியதாக மட்டும் ஏற்படும். (21 - 6 – 1914)[1]

குறிப்புகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 9-10. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பால_கங்காதர_திலகர்&oldid=17988" இலிருந்து மீள்விக்கப்பட்டது