பழமை
வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் நடுக்காலம் வரையிலான மனித வரலாறு
பழமை அல்லது பழைமை என்பது தொன்மையைக் குறிப்பதாகும். இது குறித்த மேற்கோள்கள்
- பழமையின் உறவுகளை அறுத்துவிடும் எதிர்காலத்தை நான் விரும்பவில்லை. -ஜியார்ஜ் எலியட்[1]
- ஆகப் பழங்காலத்தில் இருந்தவர்களும் இப்பொழுதும் நம்மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். -ஜியார்ஜ் எலியட்[1]
- எதிர்காலத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால், பழமையை ஆராய்ந்து பார். -கன்ஃபூஷியஸ்[1]
- பழமையைப்பற்றி நமக்கு எவ்வளவு தெரியாதோ, அவ்வளவு அதை நாம் மதிக்கிறோம். - தியோடோர் பார்க்கர்[1]
- இப்பொழுது பழமையானவை என்று கருதப்பெறும் விஷயங்கள் ஒரு காலத்தில் புதுமைகளாக இருந்தன. இன்று நாம் மாதிரிகளாக்க் கொண்டிருப்பவை. வருங்காலத்தில் மாதிரிகளாக் விளங்கும். -டானிடஸ்[1]