பல்கேரியா பழமொழிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இப்பக்கத்தில் பல்கேரியா பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.
- அழகான மனைவியும் அருமையான பழைய மதுவும் இருந்தால், நண்பர்கள் பலர் வருவார்கள்.
- உன் குழந்தைகள் தீயோராயிருந்தால், நீ அவர்களுக்குச் சொத்து வைக்க வேண்டாம்; அவர்கள் நல்லோராயிருந்தால், உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை.
- உன் வீடு-உனது ராஜ்யம்.
- என் முதல் மனைவி மனைவியா யிருந்தாள்; இரண்டாமவள் என் யசமானியா யிருந்தாள்; மூன்றாமவளை நான் சிலுவை போல் வைத்துக் கும்பிடுகிறேன்.
- ஒருவன் சகோதரனைத் தேடிக் கடல் வரை போவான்;. காதலியைத் தேடிக் கடலுக்குள்ளேயும் போவான்.
- ஒன்று இளமையிலேயே திருமணம் செய்து கொள் , அல்லது துறவியாகி விடு.
- கடவுள் ஒவ்வொரு பிணிக்கும் ஒரு பச்சிலை அளித்திருக்கிறார்.
- காதல் ஒன்றுதான் பங்காளிகளை அனுமதிக்காது.
- செல்லமாக வளர்ந்த பெண் நூல் நூற்க மாட்டாள். (மேலை நாடுகளில் கம்பள நூல் நூற்றல் கன்னியர் செய்யவேண்டிய தொழிலாக இருந்தது.)
- தந்தைதான் வீட்டுக்கு விருந்தாளி.
- நீ வெளியில் எங்கே சுற்றினாலும், இன்பமயமான உன் வீட்டுக்கு வந்துவிடு.
- நீண்ட தலைக்காரிக்கு ஆழமில்லாத உள்ளம்.
- நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளி துருக்கியனை விட மோசமானவன்.
- பானையாக உருண்டு சென்று மூடியை கண்டுபிடிக்கும்.
(திருமணத்திற்கு ஜோடி சேரும்.) - பிறப்பில் அழுகிறோம், இறப்பில் ஏன் என்பதைக் காண்கிறோம்.
- பெண் இல்லாத வீடு வாளியில்லாத கிணறு.
- பெண் இல்லை யென்றால், வீடில்லை.
- மரணம் உண்மையே பேசும்.
- மரணமில்லாவிட்டால், வாழ்க்கை அற்புதமானதுதான்.
- முதியோரை மதித்தல் ஆண்டவனை மதிப்பதாகும்.
- மூக்கின்மேல் பரு வந்தால் அது ஆளை மறைத்துவிட்டுத் தானே முன்னால் தெரியும்.
- வாழ்க்கை வேண்டுமானால், நாட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
- வாழவேண்டியவனுக்கு மருந்துக்குப் பஞ்சமில்லை.
- வெறும் கையோடு வீடு திரும்பினால், உன்னை வீட்டுக்கு உடையவனாக. எண்ணிக் கொள்ள வேண்டாம்.
[வீட்டில் அனைவரும் அலட்சியமாக எண்ணுவர்.]