பரிசுகள்
பரிசுகள் (Gifts) என்பவை பதிலுக்கு ஏதாவது வரும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் எதையாவது அளிப்பது ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- நண்பர்கள் கேட்டால், நாளை என்பதில்லை. -ஹெர்பெர்ட்[1]
- பரிசுகள் அளிக்கும் பொழுது நீடித்து நிற்பவைகளாக அளிக்கவும், அவை நீண்ட காலத்திற்கு நமது நினைவை உண்டாக்கிக்கொண்டிருக்கும். -ஃபுல்வர்[1]
- உன் பகைவனுக்கு அளிக்கத் தகுந்த முதன்மையான பரிசு. மன்னிப்பு' உனக்குப் போட்டியாயுள்ளவனுக்கு, சகிப்புத் தன்மை; நண்பனுக்கு. உன் இதயம்; உன் குழந்தைக்கு நல்ல மாதிரியான நடத்தை; தந்தைக்கு மரியாதை; உனது தாய்க்கு. அவள் உன்னைப்பற்றிப் பெருமைப்படத்தக்க ஒழுக்கம்; உனக்கு தன்மானப் பெருமை: எல்லா மனிதர்களுக்கும். தாராள மனப்பான்மை. - பால்ஃபோர்[1]
- அன்போடு அளித்தால், சிறு பொருளாயிருந்தாலும் உண்மையில் பெரியதாகும். -பிண்டார்[1]
- அளிப்பவன் இதயமே பரிசின் பெருமையை அரியதாக்குவது. -லூதர்[1]