பயனர்:Neyakkoo/மணல்தொட்டி

பத்தினிப் பானை படபடவென வெடிக்கிறது.15435

பத்தினிப் பெண்ணைப் பதற்றமாய்ப் பேசாதே.

பத்தினி படாபடா என்றாளாம், பானைசட்டி லொட லொட என்றனவாம்.

பத்தினியைத் தொட்டதும் துரியோதனன் கெட்டதும்.

(பட்டதும்.) பத்தினியைப் பஞ்சணையில் வைத்துக் கொள்.

பத்தினி வாக்குப் பலிக்கும்15440

பத்தினி வாக்குக்குப் பழுது வராது.

பத்தினி வாக்கும் உத்தமி வாக்கும் பலித்தே விடும்.

பத்து அடி பிள்ளை, எட்டு அடி வாழை.

(பிள்ளை-தென்னம்பிள்ளை.) பத்து அரிசியும் வேகவில்லை, பாவி என் பிராணனும் போக வில்லை.

(பிராமணனும்) பத்து ஆண்டிக்கு ஒருவன் பாதக் குறட்டாண்டி,15445

பத்து ஆனாலும் பதற்றம் வேண்டாம்; அஞ்சு ஆனாலும் அவசரம் வேண்டாம்.

பத்து இறுத்த பின்பு பாரச் சந்தேகம் தீர்ந்தது.

பத்து இறுத்தாலும் பராச் சத்தேகம் தீராது.

பத்து உள்ள என் தம்பி, பணமுள்ள என் தம்பி, காசுள்ள என் தம்பி, கணக்கப் பிள்ளை உன்தம்பி.


பத்து ஏர் வைத்துப் படி முறமும் தோற்றேன்; எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்?15450 (விவசாயி ஜைனவிக்கிரகத்தைப் பார்த்துக் கேட்டது. படைமுறமும்.)

பத்துக் கப்பல் வந்தாலும் பறந்த கப்பல்; எட்டுக் கப்பல் வந்தாலும் இறந்த கப்பல்.

பத்துக் காதம் போனாலும் பழக்கம் வேண்டும்.

பத்துக் குட்டி அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.

பத்துக் குடியைக் கெடுத்தவன் பணக்காரன்.

பத்துக்குப் பத்தரை விற்றால் ஒரு பள்ளிக் குடும்பம்.15455 (பள்ளிக் குப்பம்.)

பத்துக்குப் பின் பயிர்.

பத்துக்கு மிஞ்சின பதி விரதை எது?

(பத்துக்கு மேல்- இல்லை.) பத்துக்கு மேலே ஒரு பறையனுக்காவது தள்ள வேண்டும்.

பத்துப் பணம் கையில் தந்தால் பதிவிரதையும் வசப்படுவாள்.

பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது.15460

பத்துப் பணம் வேணும்; இல்லாவிட்டால் பத்து ஜனம் வேணும்.

பத்துப் பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கிக் காட்டினாளாம்.

(யாழ்ப்பாண வழக்கு.) பத்துப் பேர் கண்ட பாம்பு சாகாது.

பத்துப் பேர் மருத்துவச்சிகள் கூடிக் கொண்டு குழந்தை கையை ஒடித்தார்கள்.

பத்துப் பேர் மெச்சப் படிக்கிறதிலும், ஆயிரம் பேரை அடிக்கிறதிலும், நாலு பேர் மெச்ச நடிக்கிறதிலும், மிடாமிடாவாகக் குடிக்கிறதே கெட்டிக்காரத்தனம்.15465

பத்துப் பேருக்குப் பல் குச்சி; ஒருவனுக்குத் தலைச்சுமை.

பத்துப் பேரைக் கொன்றவன் பரியாரி,

(வேரை, பரியாரி வைத்தியன்.) பத்துப் பேரோடு பதினோராம் பேராய் இருக்க வேணும்.

பத்தும் தெரிந்தவன் பல்லக்கு ஏறுவான்; சூனியமானவன் சுமந்து செல்வான்.

பத்து மாட்டில் கட்டுக்கு அடங்காதவன்.15470

பத்து மிகை இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்.

(மிளகு.)

பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது; ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது.

(அஞ்க வந்தாலும் அவசரம்.) பத்து வயதானால் பறையனுக்காவது பிடித்துக் கொடுக்க வேண்டும்.

பத்து வயதிலே பாலனைப் பெறு.

பத்து வராகன் இறுத்தோம்; என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே.15475

பத்து வராகனுக்கு மிஞ்சின பதிவிரதை இல்லை.

பத்து வருஷம் கெட்டவன் பருத்தி விதை; எட்டு வருஷம் கெட்டவன் எள் விதை.

பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக்கூடாது.

பத்து விரலாலே வேலை செய்தால் ஐந்து விரலால் அள்ளிச் சாப்பிடலாம்.

(பத்து விரலாலே பாடுபட்டால்) பத்தூர் பெருமாளகரம்; பாழாய்ப் போன கொரடாச்சேரி; எட்டூர் எருமைக் கடா? இழவெடுத்த நாய்.15480

பத்தைக்குள் கிடந்ததைத் தூக்கி மெத்தையிலே வைத்தால் அது பத்தையைப் பத்தையைத்தான் நாடும்.

(யாழ்ப்பாண வழக்கு) பத்தோடே பதினொன்று; அத்தோடே இது ஒன்று

பத்மாசுரன் பரீட்சை வைத்தது போல.

பதக்குக் குடித்தால் உழக்குத் தங்காதா?

பதக்குப் போட்டால்முக்குறுணிஎன்றானாம்.15485

பதத்துக்கு ஒரு பருக்கை.

பதம் கெட்ட நாயைப் பல்லக்கில் வைத்தால் கண்ட இடமெல்லாம் இறங்கு இறங்கு என்னுமாம்.

பதமாய்ச் சிநேகம் பண்ண வேண்டும்.

(செய்ய வேண்டும்) பதவி தேடும் இருதயம் போல.

பதறாத காரியம் சிதறாது.15490

பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப் போகும்.

பதறின காரியம் பாழ்.


பதனம் பத்துக்கு எளிது.

(பத்துக் கழஞ்சு) பதி இல்லாத பூனை பரதேசம் போயிற்றாம், நெத்திலி மீனை வாயிலே கவ்விக் கொண்டு,

பதிவிரதா பத்தினி கதை கேட்டு வந்தேன்; பட்டுக் கிடப்பாய் காலை மடக்கு.15495

பதிவிரதை ஆனால் தேவடியாள் வீட்டிலும் தங்கலாம்.

பதிவிரதைக்குப் பர்த்தாவே தெய்வம்.

பதிவிரதையைக் கெடுக்கப் பதினைந்து பொன்.

பதின்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.

பதின்காதம் போனாலும் பழக்கம் வேண்டும்,15500

பதின்மர் பாடும் பெருமாள்.

பதினாயிரம் கொடுத்தாலும் பதைபதைப்பு ஆகாது.

பதினாறு பல்லில் ஒரு நச்சுப் பல் இருக்கும்.

பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்.

பதுங்குகிற புலி பாய்ச்சலுக்கு அடையாளம்.15505 (பதுங்குகிறதெல்லாம்)

பதுமை போல நடிக்கின்றான்.

பத்தடி போல் துள்ளிப் பரிதவிக்கிறது.

பத்தைக் கண்டு பயந்த ஆனை போல.

பந்தம் கெட்டு மோட்சம் காணி யாட்சி ஆகும்.

பந்தம் சொன்னால் படைக்கு ஆகார்,15510

பந்தமும் கூத்தும் விடிந்தால் தெரியும்.

பந்தல் இல்லாத வாழைக்காய் பரப்பிக் கொண்டு ஆடுதாம்.

பந்தல் பரக்கப் போட்டான் சந்திரநாதன்; வந்தி நெருங்க வைத்தான் பத்திர பாகு.

பந்திக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறதாம்.

(தொங்கவா?) பந்திக்கு முந்த வேண்டும்; படைக்குப் பிந்த வேண்டும்.15515 (பந்திக்கு முந்திக்கொள்)

பந்திக்கு வேண்டாம் என்றால் இலை பீற்றல் என்றானாம்.

(பொத்தல் என்றான்) பந்தியில் உட்காராதே என்றால் இலை பீற்றல் என்றானாம்.

(பொத்தல் என்றான்)

பப்பு மிஞ்சினால் உப்பு; உப்பு மிஞ்சினால் பப்பு.

பம்பரமாய் ஆட்டி வைக்கிறார்.

பயணக்காரன் பைத்தியக்காரன்.15520

பயந்த மனுஷி பரிமாறப் போனாளாம்; பந்தியில் இருந்தவர்கள் எல்லாம் எடுத்தார்கள் ஓட்டம்.

(பரிமாற வந்தாள். இருந்தவர்கள் எல்லாம் எழுந்து போய் விட்டார்கள். இருந்த ஆண்கள் எல்லாம்.)

பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

பயம் உள்ளவரை ஜயம் இல்லை.

பயல் சரண் உயரம்; பழையது முழ உயரம்.

பயற்றங்கூழுக்குப் பங்கு இழந்தவன் கதைபோல.15525

பயற்றம் பருப்புப் பத்தியத்துக்கு.

பயறு பயறு என்ற பிள்ளை பசறு பசறு என்கிறது.

(என்கிறதாம்.) பயிர் கிளைத்தால் ஆச்சு; களை கிளைத்தால் போச்சு.

பயிர் செழிக்கப் பார் செழிக்கும்.

பயிர் பலிக்கும் பாக்கியவானுக்கு; பெண்டு பலிக்கும் புண்ணியவானுக்கு.15530

பயிருக்குக் களை எடுத்தாற்போல.

பயிரைக் கொடுத்துப் பழந்தொழி வாங்கு.

(பழம் புழுதி.) பயிரை வளர்ப்பான் உயிரை வளர்ப்பான்.

பர்த்தாவும் பார்த்திருக்கப் புத்திரனும் கொள்ளி வைக்க.

(சுமங்கலியாகச் சாதலைக் குறிப்பது.) பரக்கத் தலை விரித்துப் பட்டினியாச் சீராட்டி. {{float_right|15535}


பரக்கப் பரக்க அலைந்தாலும் இருக்கிறதுதான் இருக்கும்,

பரக்கப் பரக்கப் பாடுபட்டும் படுக்கப் பாய் இல்லை.

பரணி அடுப்புப் பாழ் போகாது.

பரணியான் பாரவன்.

பரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான்.15540

பரத்தைக்குக் கொடுக்கும் பணத்தைக் குடிப் பெண் வாங்கிக் குலம் கெடுவாளா?

பரதம் எப்படி, பக்தர்கள் அப்படி.

பரதவர் சேரியில் பரிமளப் பொருள் விற்றது போல்,


பரதேசிக்குச் சுடு சோறு பஞ்சமா?

பரதேசியின் நாய்க்குப் பிறந்த ஊர் நினைவு வந்தது போல.15545

பரப்பான் பயிர் இழந்தான்; இரப்பான் சுகம் இழந்தான்.

பரப்பிரமத்தை தியானம் செய்வதனால் பிரகாசிக்காமல் இருந்த விஞ்ஞானமும் பிரகாசிக்கிறது.

பரபரப்பிலே பாழும் சுடலை ஆச்சு.

பரபோகம் தேடி, இக போகம் நாடி, வாழ்க்கை பெற வேண்டும்.

பரம்பரை ஆண்டியோ? பஞ்சத்துக்கு ஆண்டியோ?15550

பரிக்கு இடும் கடிவாளத்தை நரிக்கு இடுகிறது.

பரிகாசப்பட்டவனைப் பாம்பு கடித்தாற்போல.

பரிகாரி உறவு தெருவாசல் மட்டும்.

பரிகாரி கடை கொள்ளப் போன கதை.

பரிகாரி தலைமாட்டிலிருத்து அழும் தன்மை போல.15555

பரிசத்துக்கு அஞ்சிக் குருட்டுக் கன்னியைக் கொண்டது போல.

பரிசத்துக்கு லோபி இழிகண்ணியைக் கொண்டானாம்.

(பரிசத்துக்குப் பால் மாறி.) பரிசு அழிந்தாரோடு தேவரும் ஆற்றிலர்.

(பழமொழி நானூறு.) பரிந்த இடம் பாழ்.

பரிந்து இட்ட சோறு பாம்பாய்ப் பிடுங்குகிறது.15560

பரிந்து இடாத சோறும் சொரிந்து தேய்க்காத எண்ணெயும் பாழ்.

பரிவு இல்லாப் போசனத்தில் பட்டினி நன்று; பிரியம் இல்லாப் பெண்டிரிற் பேய் நன்று.

பருத்தவள் சிறுப்பதற்குள் சிறுத்தவள் செத்துப் போவாள்.

பருத்தி உழுமுன்னே தம்பிக்கு எட்டு முழம்.

பருத்திக் கடையிலே நாய்க்கு அலுவல் என்ன?15565 (என்ன வேலை?)

பருத்திக் காடு உழுகிறதற்கு முன்னே பொம்மனுக்கு ஏழு முழம் திம்மனுக்கு ஏழு முழம்.

பருத்திக் கொட்டை பழம் புளி.

(-உபயோகம் அற்றவை.) பருத்திச் செடி புடைவையாய்க் காய்த்தது போல.

பருத்திச் செடியும் பாலும் உள்ளானுக்குப் பஞ்சம் இல்லை.

பருத்திப் பொதிக்கு ஒரு நெருப்புப் பொறி போல.15570


பருத்தி பட்ட பாடு எல்லாம் படுகிறது.

பருத்தி புடைவை புடைவையாய்க் காய்த்தாற் போல.

பருத்தி புடைவையாய்க் காய்த்தால் எடுத்து உடுத்தல் அரிதா?

பருத்தி விதைக்கும் போதே, அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்றாளாம்.

பருந்தின் கழுத்தில் பவளத்தைக் கட்டினால் கருடன் ஆகுமா?15575

பருந்து எடுத்துப் போகுதென்று பார்க்க வந்தனையா? இந்தக் குரங்கு எடுத்துப் போடுதே கோவிந்தா!

பருப்பிலே நெய் விட்டது போல.

(வார்த்தது போல.) பருப்பு இல்லாமல் கல்யாணமா?

(கல்யாணம் உண்டா?) பருப்புச் சோற்றுக்குப பதின்காதம் வழி போவான்.

பருப்புத் தின்ற பண்டிதன் போல்.15580

பருப்புத் தின்னிப் பார்ப்பான்.

பருப்புத் தேங்காய் இல்லாமல் கல்யாணமா?

பருப்பும் அரிசியும் கலந்தாற்போலப் பெண்ணும் பிள்ளையும்.

பருப்பும் பச்சரிசியும்.

பருமரத்திலே சிறு காய் எடுத்தாற் போல.15585

பருமரத்தை அண்டிய பல்லியும் சாகாது.

பருமரத்தைச் சேர்ந்தால் பல்லியும் பொன் நிறம் ஆகும்.

பருவத்தில் பெற்ற சேயும் புரட்டாசி பாதிச் சம்பா நடுகையும்,

பருவத்தே பயிர் செய்.

பருவத்தோடு ஒத்து வாழ்.15590

பருவம் தப்பினால் பனங்கிழங்கும் நாராகும்.

(பருவத்துக்கு.) பருவம் வந்தால் பன்றிக் குட்டியும் நன்றாகும்.

பரோபகாரம் இதம் சரீரம்.

பரோபகாரமே பெரிது.

பல் அசைந்தால் பசி தீரும்.15595 (ஆறும்.)

பல் ஆடப் பசி ஆறும்.

பல் இழந்தான், சொல் இழந்தான்.

பல் முந்தினால் சொல் பிந்தும்; சொல் முந்தினால் பல் பிந்தும்.

(யாழ்ப்பாண வழக்கு.)

பல்லக்கில் போகும் நாய் ஆனாலும் எச்சில் இலையைக் கண்டால் விடுமா?15600

பல்லக்கு ஏறப் போகம் உண்டு; உன்னி ஏறச் சீவன் இல்லை.

(பலம், சக்தி.) பல்லக்கு ஏறுவதும் நாவாலே; பல் உடைபடுவதும் நாவாலே.

பல்லக்கு ஏறுவோரும் பல்லக்குச் சுமப்போரும் அவரவர் செய்த நல்வினை, தீவினையே.

பல்லக்கு வருகிறதும் வாயினாலே; பல்லுப் போகிறதும் வாயினாலே.

பல்லாண்டு விளைந்த நிலம்.15605 (-மதுரை.)

பல்லாய் இல்லாமல் பால் கறப்பான்.

பல்லி சொல்வதெல்லாம் நல்லது; முழுகுவதெல்லாம் கழுநீர்ப்பானை.

பல்லில் பச்சரிசி வைக்க.

பல்லுக்கு எட்டாத பாக்கும், பக்கத்துக்கு எட்டாத அகமுடையானும் விண்.

பல்லுத் தேய்த்தற்குப் பதக்கு நெல் கொடுத்தேன்.15610

பல்லுப் பிடுங்கின பாம்பு போல.

பல்லுப் பெருத்தால் ளொள்ளும் பெருக்கும்.

பல்லுப் போனால் சொல்லும் போச்சு.

(பல்லுப் போச்சு, பழைய சொல்லும் போச்சு.) பல்லுப் போனாலும் ளொள்ளும் போகாது.

பல்லும் பவிஷும்.15615

பல்லைக் காட்டிச் சிரிக்காதே.

பல்லைக் காட்டிப் பரக்க விழிக்காதே.

(காட்டிப் பரிதவிக்கிறது.) பல்லைக் குத்தி மோந்து பார்த்தால் தெரியும் நாற்றம்.

பல்லைக் குத்தி மோந்து பார்த்தால் போலே.

பல்லைத் தட்டித் தொட்டிலிலே போடு.15620

பல்லைப் பல்லை இளித்தால் பறையனும் மதிக்கமாட்டான்.

பல்லைப் பிடுங்கின பாம்பு போல.

பல் வரிசை இரண்டுக்கும் நடுவில் பதுங்கிவிட்ட நாக்குப் போல.

பல்விழுந்த புடையன்.


பல் விழுந்த புடையனுக்குக் கிருதா.15625

பல உமி தின்றால் ஓர் அவல் தட்டாதா?

(ஓர் அவிழ் தட்டும்.) பல எலி கூடினால் புற்று எடுக்காது.

(யாழ்ப்பாண வழக்கு.) பல கரும்பிலும் ஒரு கைவெட்டு.

பலசரக்குக் கடைக்காரனுக்குப் பைத்தியம் பிடித்தது போல.

பலத்தவன் கைக்கு இளைத்தவன் துரும்பு.15630

பலத்தவனுக்கு மருத்து சொன்னால் பிடுங்கிக் கொடுத்துத் தீர வேண்டும்.

பல தீட்டுக்கு ஒரு முழுக்கு.

பல துளி ஆறாய்ப் பெருகும்.

பல துளி பெரு வெள்ளம்.

பல தொல்லைக்காரன்.15635

பல நாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.

பல நாளை வெயில் ஒறுத்தாலும் ஒரு நாளை மழை ஒறுக்காதே.

பல பாளம் தீர ஒரு புண்ணியமாகிலும் பண்ண வேண்டும்.

பல பிச்சை ஆறாய்ப் பெருகும்.

பல பீற்றல் உடையான் ஒரு பீற்றல் அடையான்.15640

பலம் தேயப் போய்ப் பழி வந்து சேர்ந்தது போல.

(பலன்.) பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.

பல மரம் கண்டவன் ஒரு மரமும் ஏறப் போவதில்லை.

பல முயற்சி செய்யினும் பகவான்மேல் சிந்தைவை.

பலர் கண் பட்டால் பாம்பும் சாகும்.15645

பல வாய்க்கால் ஆறாய்ப் பெருகும்.

பல வீட்டு உறவு முறை பட்டினி,

பல வீட்டுப் பிச்சை ஒரு வீட்டுச் சோறு.

பலவும் தின்றால் ஓர் அவல் தட்டாதா?

பலன் இல்லாப் பல நாளிலும் அறம் செய்த ஒரு நாள் பெரிது.15650

பலன் தேடப் போய்ப் பழி வந்து நேர்த்தது போல,

பலா உத்தமம்; மா மத்திமம்; பாதிரி அதமம். 


பலாக் காயையும் சாம்பானையும் கண்ட இடத்தில் வெட்டு.

(சாமானையும்.) பலாப் பழத்துக்கு ஈப் பிடித்து விடுவார் உன்டோ?

(ஈ பிடித்து விடவேண்டுமா.) பலாப் பிஞ்சு கண்ட இடத்திலே திவசம் செய்ய வேண்டும்.15655

பலிக்குப் போகிற ஆடுபோலே.

பவிசு கெட்ட பாக்கு வெட்டிக்கு இரு புறமும் தீவட்டியாம்.

(பாட்டிக்கு.) பழக்கம் கொடியது. பழக்கம் வழக்கம்.

பழக்கமேணும் சரசம் இன்றி ரவிக்கையில் கைபோடக் கூடாது.15660

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பழகாத நாய்மாதிரி விழுகிறான்.

பழகிய பகையும் பிரிவு இன்னாது.

(நற்றிணை.) பழங்கணக்குப் பருத்தி விதைக்கும் ஆகாது.

பழங்காலைத் தூர்க்காதே; புதுக்காலை வெட்டாதே.15665 (தூர்க்கவும் வேண்டாம்)

பழத்திலே பழம் மிளகாய்ப் பழம்.

பழத்துக்குத் தெரியும்; வௌவாலுக்குத் தெரியும்.

பழந்தீர் மரவயிற் பறவை போல.

பழந் தேங்காயிலேதான் எண்ணெய்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது; அதுவும் நழுவி வாயில் விழுந்தது.15670

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல.

பழம்பகை நட்பாதல் இல்.

(பழமொழி நானுாறு.) பழம் பழுத்தால் கொம்பில் தங்காது.

பழம் புண்ணாளி பாதி வைத்தியன்.

(பர்யாரி.) பழமும் தின்று கொட்டையும் போட்டான்.15675

பழமை பாராட்ட வேண்டும்.

பழமை பாராட்டினால்தான்.

பழமொழியில் உமி இல்லை.


பழி ஓரிடம், பாரம் ஓரிடம்.

பழி ஓரிடம், பாவம் ஓரிடம்.15680

பழிக்கு அஞ்சாதவன் கொலைக்கு அஞ்சுவானா?

பழிக்கு அஞ்சு; பாவத்துக்கு அஞ்சு.

பழிக்கு ஆனோர் சிலர்; பழிக்கப் படுவோர் சிலர்.

பழிக்குப் பழி.

பழித்தார் தலையில் பாடு வரும்.15685

பாமுனை பகரேல்.

பழி போட்டுத் தலை வாங்குகிற ஜாதி.

பழி விட்டுப் போகாது.

பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரித்ததாம்.

(பழ இலையை, பச்சை இலை சிரித்ததாம்.) பழுத்த பழம் போல.15690

பழுத்த பழம் வௌவாலை அழைக்குமா?

(அழைக்குமாம்.) பழுத்தல் இல்லாத துணிவு பாரம் இல்லாத கப்பல்.

பழுத்துக் கெடுப்பது பாகல்; பழுக்காமல் கெடுப்பது இரத்தக் கட்டி.

பழுது செய்ததை அறிக்கையிடில் பாதி நிவர்த்தி.

பழுதை என்று கிடக்கப்படவும் இல்லை; பாம்பு என்று நினைக்கப் படவும் இல்லை.15695

பழுதை என்று மிதிக்கவும் முடியாது; பாம்பு என்று தாண்டவும் முடியாது.

பழுதை பாம்பாய்த் தோன்றுவது போல.

பழுதையைப் பார்த்துப் பாம்பு என்கிறான்.

பழைய ஆத்தியை உருவத் தெரியும்; பருப்புச் சட்டியைக் கழுவத் தெரியும்; அவிட்டத்திற்கு ஆக்கத் தெரியும்.

(ஆத்தியை உருக்கத் தெரியும்.) பழைய கறுப்பன் கறுப்பனே; பழைய மண் கிண்ணி கிண்ணியே.15700

பழைய குருடி கதவைத் திறடி.

பழையது சாப்பிட்டுப் பள்ளிக்குப் போகச் சொன்னால் சுடு சோற்றைத் தின்று விட்டுச் சுற்றிச் சுற்றி வருகிறான்.

பழையது போடு; உனக்குப் பசியா வரம் தருகிறேன்.

பழையது மிகுந்த இடமே சாணியாட்சி.

பழைய நினைப்படா பேராண்டி.15705


பழைய பகையை எண்ணிப் பழ முள்ளுக் கிளையாதே.

பழைய பெருச்சாளி.

பழைய பொன்னனே பொன்னன்; பழைய கப்பறையே கப்பறை.

பழையனூர் நீலி பரிதவித்து அழுதது போல.

பள்ளத்தில் இருக்கிறவன் பள்ளத்திலே இருப்பானா?15710

பள்ளத்தில் இருந்தால் பெண் சாதி; மேட்டில் இருந்தால் அக்காள்,

(பெண்டாட்டி, மேட்டில் ஏறினால் தாயார்.) பள்ளத்துாரான் போனதே போக்கு.

பள்ளத்தைக் கண்டால் பாய்ந்தோடும் தண்ணீர் போல,

பள்ளம் இருந்தால் தண்ணீர் தங்கும்.

(பள்ளம் உள்ள இடத்தில்.) பள்ளம் இறைத்தவன் பங்கு கொண்டு போவான்.15715 (போகிறான்.)

பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்.

(பள்ளம் கண்ட.) பள்ளம் உள்ள இடத்திலே தண்ணீர் நிற்கும்; பயம் உள்ள இடத்திலே பழி போம்.

(கண்ட இடத்திலே.) பள்ளம் மேடு இல்லாமல் பருத்தி விதைக்கிறது.

(விளைக்கிறது.) பள்ள மடையில் பாய்ச்சிய நீர் போல.

பள்ளனுக்குப் பல் தேய்த்தால் பசிக்கும்; பார்ப்பானுக்குக் குளித்தால் பசிக்கும்.15720

பள்ளி ஒளித்திரான்; பார்ப்பான் குளித்திரான்.

பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது.

(கணக்கன் உதவான்.) பள்ளிக்கு ஓர் இடம் எச்சில்; பார்பானுக்குக் கண்ட இடம் எல்லாம் எச்சில்,

பள்ளிக் குப்பத்து அப்பட்ட வாத்தியார்.

(பள்ளிக்குப்பத்துக்கு அம்பட்டன் வாத்தியார்.) பள்ளிக்குப் பத்து மனை.15725

பள்ளிக்குப் பல்லு. பார்ப்பானுக்கு முழுக்கு.

பள்ளிக்கும் இரும்புக்கும் பதம் பார்த்து அடி.

பள்ளிக்கும் நாய்க்கும் பதம் பார்த்து அடிக்க வேண்டும்.

பள்ளிக்கு வைக்காமல் கொள்ளிக்கு வைத்தான்.

(குறைத்து வைத்தார்.) பள்ளிக்கூடத்துக்குப் போனால் வாத்தியார் அடிப்பார்.15730


பள்ளிக்கூடம் போகிறதற்கு முன்னே பயறு பயறு என்று சொன்னதாம்; பள்ளிக்கூடம் போன பிறகு பசறு பசறு என்றதாம்.

பள்ளி கெட்டால் பத்துச் சேர் மண்வெட்டி; பார்ப்பான் கெட்டால் சத்திரம் சாவடி.

பள்ளி கையில் பணம் இருந்தால் பாதி ராத்திரியில் பாடுவான்.

பள்ளி கொழுத்தால் பாயில் தங்கமாட்டான்; நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.

பள்ளிச் சிநேகிதம் பசுமரத்தாணி.15735

பள்ளி தேய்த்திருக்கான்; பார்ப்பான் குளித்திருக்கான்.

பள்ளிப் பிள்ளை என்றால் செல்வம் குறையுமா?

(செல்லம்.) பள்ளிப் பிள்ளைக்குப் பகுத்தறிவு ஏது?

பள்ளி பாக்குத் தின்றால் பத்து விரலும் சுண்ணாம்பு,

பள்ளி புத்தி பறையன் பானையிலே,15740

பள்ளி மச்சான் கதை போல.

பள்ளி முத்தினால் படையாச்சி.

பள்ளியை நினைத்துப் பாயில் படுத்தால் பரமசிவன் போல் கனவு வரும்.

(பிள்ளை வரம்) பள்ளியையும் இரும்பையும் பதம் பார்த்து அடி.

பள்ளியையும் பனங்காயையும் பதம் பார்த்து அடிக்கவேண்டும்.15745

பள்ளி வாழ்வு பத்து வருஷம்; பார்ப்பான் வாழ்வு முப்பது வருஷம்,

பள்ளி வெற்றிலை போட்டால் பத்து விரலும் சுண்ணாம்பு.

பள்ளி வைத்திய நாதன் கோயில்.

பள்ளுப் பறை பதினெட்டுச் சாதி.

பளியரிடம் புனுகு விற்றது போல.15750

பற்றாததற்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திர நேரம் குடை.

(யாழ்ப்பாண வழக்கு, பற்றாப் பொறுக்கிக்குப் பவிசு வந்தால் பாதி ராத்திரியிலே குடை.) பற்றுக் கோலுக்கு என்று பிடித்தால் அரிவாள் பிடிக்கு வந்துநிற்கும்.

பற்றுப் பறக்கடிக்கும்; எச்சில் இரக்கப் பண்ணும்.

பற்று விட்டால் சித்தி.

(சித்து.) பறக்கிற குருவி சிறகிலே இறை கொண்டு போமா?15755


பறக்கிற பட்சிக்கு எது தூரம்?

பறக்கும் காகத்துக்கு இருக்கும் கொம்பு தெரியாது.

(தெரியாதா?) பறக்கும் குருவிக்கு இருக்கும் கொம்பு தெரியாது; பரதேசிக்குத் தங்கும் இடம் தெரியாது.

(குருவிக்கு இருக்கும் இடம்) பறக்கையில் தெரியாதா காக்கையின் முடுக்கு.15760 (புடுக்கு.)

பறங்கிக்காய் அழுகலைப் பசுவுக்குப் போடு; பசுவுத் தின்னா விட்டால் பார்ப்பானுக்குக் கொடு.

பறங்கிக் காய் திருடினவன் தோளைத் தடவிப் பார்த்தது போல,

பறங்கிக்குத் தெரியுமா சடங்கும் சாஸ்திரமும்?

பறங்கி நல்லவன்; பிரம்பு பொல்லாதது.

பறந்து பறந்து பாடுபட்டாலும் பகலுக்குச் சோறு இல்லை.15765

பறந்து போகிற எச்சில் இலைமேல் கல்லைத் தூக்கி வைத்தாற்போல,

(பாறாங்கல்லை.) பறந்து போகிற காகமும் பார்த்து நின்று பறந்து போகும்.

பறப்பான் பயிர் இழந்தான்; அறக் காஞ்சி பெண்டு இழந்தான்.

பறவை பசித்தாலும் எட்டிக் கனியைத் தின்னாது.

பறிகொடுத்த கட்டில் பயம் இல்லை.15770

பறி நிறைந்தால் கரை ஏறுவேன்.

பறைக்குடி நாய் குரைத்தால் பள்ளக்குடி நாயும் குரைக்கும்.

பறைச்சி பிள்ளையைப் பள்ளிக்கு வைத்தாலும் பேச்சிலே ஐயே என்னுமாம்.

பறைச்சி பெண் ஆனாலும் துடைத்துவிட்டாற் போல் இருக்கிறது.

பறைச்சி முலை அழகு; பாப்பாத்தி தொடை அழகு; கோமுட்டிச்சி குறி அழகு.15775

பறைச்சி வெற்றிலை போட்டால் பத்து விரலும் சுண்ணாம்பு.

பறைச்சேரி அழிந்தால் அக்கிரகாரம்.

பறைச்சேரி நாய் குரைத்தால் பள்ளச்சேரி நாயும் குரைக்கும்.

பறைச்சேரி மேளம் கல்யாணத்துக்குக் கொட்டும்; கல்லெடுப்புக்கும் கொட்டும்.

பறைச்சேரியில் முளைத்த வில்வமரம் போல.15780 (பறைத் தெருவில் வில்வம் முளைத்தது போல.)

பறை தட்டினாற் போல.

பறைந்த வாயும் கிழிந்த சீலையும் கிடவா.

(யாழ்ப்பாண வழக்கு.) பறைப்பாட்டுக்கும் பறைப் பேச்சுக்கும் சுரைப் பூவுக்கும் மணம் இல்லை.

பறைப் பிள்ளையைக் கொண்டு போய்ப் பள்ளிக்கூடத்தில் வைத்தாலும் அணை என்கிற புத்தி போகாது.

(எதற்கும் அணை என்பதைச் சேர்த்துப் பேசுவார்கள். கொங்கு நாட்டு வழக்கு.) பறைப் புத்தி அரைப் புத்தி.15785

பறைப் பூசம்.

பறையரிலே சிவத்தவனையும் பார்ப்பானிலே கறுத்தவனையும் நம்பக் கூடாது.

பறையன் பாக்குத் தின்பதும் பறைச்சி மஞ்சள் குளிப்பதும் அறிப்பும் பறிப்பும் மட்டும்.

பறையன் பொங்கல் போட்டால் பகவானுக்கு ஏலாதோ?

(ஏறாதோ?) பறையன் வளர்த்த கோழியும் பார்ப்பான் வளர்த்த வாழையும் உருப்படா.15790

பறையன் வீட்டில் பால் சோறு ஆக்கி என்ன? நெய்ச் சோறு ஆக்கி என்ன?

பறையனுக்குக் கல்யாணமாம்; பாதி ராத்திரியிலே வாண வேடிக்கையாம்.

பறையனுக்குப் பட்டால் தெரியும்; நண்டுக்குச் சுட்டால் தெரியும்.

பறையனுக்கு வரிசை வந்தால் பாதி ராத்திரியிலே குடை பிடிப்பான்.

பறையனுக்கு வள்ளுவன் பாதிச் சைவன்.15795

பறையனும் பார்ப்பானும் போல,

பறையனை நம்பு; பார்ப்பானை நம்பாதே.

பறையனைப் போல் பாடுபட்டுப் பார்ப்பானைப் போல் சாப்பிட வேண்டும்.

பறையைப் பள்ளிக்கு வைத்தாலும் துறைப் பேச்சுப் போகுமா?

பறை வேலை அரை வேலை.15800

பன்றிக் குட்டி ஆனை ஆகுமா?

பன்றிக் குட்டிக்கு ஒரு சந்தி ஏது?


பன்றிக் குட்டிக்குச் சங்கராந்தி ஏது?

(சோமவாரமா?) பன்றிக்குட்டி பருத்தால் ஆனைக்குட்டி ஆகுமா?

பன்றிக்குத் தவிடு வைக்கப் போனாலும் உர் என்கிறது; கழுத்து அறுக்கப் போனாலும் உர் என்கிறது.15805

பன்றிக்குத் தவிடு வைப்பது தெரியாது; கழுத்தை அறுப்பதும் தெரியாது.

பன்றிக்குப் பல குட்டி; சிங்கத்துக்கு ஒரு குட்டி.

பன்றிக்குப் பின் போன கன்றும் மலம் தின்னும்,

(பசுங்கன்றும்.) பன்றிக்கும் பருவத்தில் அழகிடும்.

பன்றி பட்டால் அவனோடே; காட்டானை பட்டால் பங்கு.15810

பன்றி பல ஈன்று என்ன ஆனைக்குட்டி ஒன்று போதாதா?

(குஞ்சரம் ஒன்று போதும்.) பன்றி பல குட்டி; சிங்கம் ஒரு குட்டி.

பன்றி பல குட்டி போட்டாற் போல.

பன்றி புல் தின்றதனால் பயன் உண்டா?

பன்றியின் பின்னோடு பத்தெட்டும் போகிறது.15815

பன்றி வேட்டையில் பகல் கால் முறிந்த நாய்க்கு இரவு கரிப் பானையைக் கண்டால் பயம்.

பன்னக்காரன் பெண்டிர் பணியக் கிடந்து செத்தான்; பரியாரி பெண்டிர் புழுத்துச் செத்தான்.

பன்னப் பன்னப் பல விதம் ஆகும்.

(தோன்றும். யாழ்ப்பாண வழக்கு.) பன்னி உரைத்திடிலோ பாரதம் ஆம்.

பன்னிப் பழங்கதை படியாதே.15820 (பேசாதே.)

பனங்காட்டில் இருந்து கொண்டு பால் குடித்தாலும் கள் என்பார்கள்.

பனங்காட்டில் மிரளுகிறதா?

பனங்காட்டு நாரி சலசலப்புக்கு அஞ்சுமா?

பனங்காயையும் பங்காளியையும் பதம் பார்த்து வெட்ட வேண்டும்.

பனங்கிழங்கு முற்றினால் நாராகும்.15825

பனிக்கண் திறந்தால் மழைக்கண் திறக்கும்.

பனிக்காலம் பின்னிட்டது; இனிக் காலனுக்கும் பயம் இல்லை.

(போச்சுது.)

பனிக்குப் பலிக்கும் வரகு; மழைக்குப் பலிக்கும் நெல்.

பனி நீராற் பாவை செய்தாற் போல.

(தேவாரம்.) பனிப் பெருக்கிலே கப்பல் ஓட்டலாமா?15830

பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை.

பனி பெய்தால் வயல் விளையுமா?

பனி பெய்து கடல் நிறையுமா?

பனி பெய்து குளம் நிரம்புமா? மழை பெய்து குளம் நிரம்புமா?

பனியால் குளம் நிறைதல் இல்.15835 (பழமொழி நானுாறு.)

பனியிலே கப்பல் ஓட்டலாமா?

பனியை நம்பி ஏர் பூட்டினது போல.

பனை அடியில் இருந்து பால் குடித்தாலும் சம்சயம்.

பனை ஆயிரம்; பாம்பு ஆயிரம்.

பனை இருந்தாலும் ஆயிரம் வருஷம்; இறந்தாலும் ஆயிரம் வருஷம்.15840

பனை ஏறியும் பானை தொடாது இறங்கினாற்போல.

(பானை தொடவில்லை.) பனை ஏறி விழுந்தவனை ஆனை ஏறி மிதித்தது போல.

(பனையாலே விழுத்தவனை மாடேறி மிதித்தது போல.) பனை ஏறுபவனை எந்த மட்டும் தாங்குகிறது?

பனை ஓலையில் நாய மொண்டது போல.

(கடா மூண்டது போல.) பனைக்குப் பத்தடி.15845

பனை நிழலும் நிழலோ? பகைவர் உறவும் உறவோ?

பனை நின்று ஆயிரம்; பட்டு ஆயிரம்.

(பனை நட்டு ஆயிரம்.) பனை மட்டையில் மழை பெய்தது போல.

பனை மட்டையில் மூத்திரம் பெய்தது போல.

பனை மரத்தின்கீழ் இருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பார்கள்.15850

பனை மரத்துக்கு நிழல் இல்லை; பறையனுக்கு முறை இல்லை.

(உறவு.)

பனை மரத்து நிழல், பாம்பாட்டி வித்தை, தெலுங்கன் உறவு, தேவடியாள் சிநேகம் நாலும் பகை.

பனையில் ஏறுகிறவனை எட்டும் வரையில்தான் தாங்கலாம்.

பனையிலிருந்து விழுந்தவனை பாம்பு கடித்தது போல.

பனையின் நிழலும் நிழலோ? பறையர் உறவும் உறவோ?15855 (பகைவர் உறவும்.)

பனைவிதை பெரிதாக இருந்தும் நிழல் கொடுக்க மாட்டாது.

பனை வெட்டின இடத்தில் கழுதை வட்டம் போட்டது போல.

பனை வைத்தவன் பார்த்துச் சாவான்; தென்னை வைத்தவன் தின்று சவான்.

பஹு ஜன வாக்யம் கர்த்தப்யம்.

"https://ta.wikiquote.org/w/index.php?title=பயனர்:Neyakkoo/மணல்தொட்டி&oldid=36511" இலிருந்து மீள்விக்கப்பட்டது