பண்டதர், பாண்டித்தியம் குறித்த மேற்கோள்கள்.

  • பண்டிதர் என்பவர் படித்துப் படித்துக் காலத்தைக் கொல்லும் சோம்பேறிகளாவர். -பெர்னார்ட் ஷா[1]
  • பாண்டித்தியம் தலைக்குள் பல பொருள்களை நிரப்பும். ஆனால் அப்படிச் செய்வதற்காக அது மூளையை எடுத்து வெளியே எறிந்துவிடவும் செய்யும். -கோல்ட்டன்[1]
  • பாண்டியத்தியமின்றி பாவனாசக்தி மட்டும் உடையவருக்குச் சிறகுகள் உண்டு. கால்கள் கிடையா. -ஜூபெர்ட்[1]
  • தற்காலத்தில் பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கவனிக்க முடியாமல் எல்லாவற்றையும் புகழ்ந்து கொண்டு இடர்ப்படுவதற்குக் காரணம் அவர்கள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாததுதான்.-புதுமைப்பித்தன்[2]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/பாண்டித்தியம். நூல் 176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 51. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=பண்டிதர்&oldid=19850" இலிருந்து மீள்விக்கப்பட்டது