பணியாளர்
பணியாளர் என்பவர் ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திலோ, அரசிலோ ஊதியத்துக்காக வேலை செய்பவராவார்.
- நல்ல பணியாளனுக்குச் சன்மானம் கொடுத்து ஆதரித்து வரவும். கெட்டவனை வைத்துக்கொண்டு அவனிடம் உரக்கக் கத்திக் கொண்டிருப்பதைவிட அவனை வெளியேற்றிவிடுவது மேல் -சேம்பர்ஸ்[1]
- முன்னால் நான் என்னிடமிருந்த வேலையாள்களில் ஒவ்வொருவனையும் நண்பனாகக் கொள்ளலாம் என்று தவறாக எண்ணிக்கொண்டிருந்தேன்; ஆனால், இப்பொழுது அடிமை வேலை செய்வதன் இயற்கை நேர் மாறான குணத்தை உண்டாக்குகின்றது என்பதைக் கண்டுகொண்டுவிட்டேன். ஜனங்களுடைய குணம் அவர்களுடைய கல்வியிலிருந்தும், வாழ்க்கையில் அவர்களுடைய நிலையிலிருந்தும் அமைகின்றது. பிறப்பு மட்டும் அதிகமாய்ப் பாதிப்பதில்லை. -ஷென்ஸ்டன்[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 253. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.