படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கை

படைப்பாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படையாக எழுதுவது, வரலாறாக ஆக்குவது, தன் வரலாற்று நூல்கள் படைப்பது போன்ற நிகழ்வுகள் பற்றிப் பலர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு மேற்கோள்களாகத் தொகுக்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  • ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கை, வெளி உலகால் அறியப்பட எவ்வித அவசியமும் இல்லாதது.
  • வருங்கால சந்ததியினர், அப்படி ஒருவன் வாழ்ந்ததே இல்லை என்று நம்பும் படியாக ஒரு கலைஞன் இருக்க வேண்டும். ~பிலாபெர்ட் [1]
  • என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி உண்மையான ஒரு வார்த்தையைக் கூட எவரும் பெற்றுவிட முடியாது. ~ இதாலா கால்வினோ [1]
  • ஒரு தனிப்பட்ட தனிமனிதனாக, வரலாற்றிலிருந்து எவ்வித தடயமும் இன்றி இல்லாமல் போய்விட வேண்டும். ~வில்லியம் பாக்னர் [1]
  • ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவனுடைய முகமும் பொதுமக்களுக்குச் சொந்தமானதல்ல. ~மாப்பசான் [1]
  • எந்த ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியனாலும் என் தனிப்பட்ட வாழ்ககையின் சிறு தருணத்தைக் கூடக் கைப்பற்ற முடியாது. ~விளாடிமிர் நபக்கோவ் [1]
  • ஒரு நாவலாசிரியன், தன் வாழ்க்கையெனும் வீட்டை இடித்துவிட்டு, வேறொரு வீட்டைக் கட்டுவதற்காக அதன் செங்கற்களைப் பயன்படுத்துகிறான். ~மிலன் குந்தேரா [1]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "ப. சிங்காரம் நாவல்கள்" புத்தகத்தின் 'கடவுளின் சிரிப்பில் உருவான நாவல்கள்' கட்டுரையில் இருந்து.