நோக்கம்
நோக்கம் என்பது இலக்குகள், குறிக்கோள்கள் மற்றும் விரும்பிய முடிவுகளை உள்ளடக்கிய பல்வேறு அர்த்தங்களைக் கொண்ட ஒரு சொல்.
மேற்கோள்கள்
தொகு- உடலுக்கு ஆன்மா எப்படியோ, மரத்திற்கு வேர் எப்படியோ, அப்படிச் செயல்களுக்குச் சரியான நோக்கங்கள் இன்றியமையாதவை. - ஸிம்மன்ஸ்[1]
- நோக்கங்கள் செயல்களைவிட மேலானவை. மனிதர்கள் குற்றத்தினுள் தாமாகச் சிக்கிவிடுகிறார்கள். தீமைகளை, அவர்கள் முன்னால் சிந்திப்பதைக்காட்டிலும், அதிகமாய்ச் செய்து விடுகிறார்கள். நன்மையில், அவர்கள் செய்வதைவிட, அதிகமாய்ச் சிந்திக்கிறார்கள். - போவீ[1]
- மனிதனுடைய மனத்தை இயக்கிவைப்பவை நன்மையில் ஆசையும் தீயதில் அச்சமும், - ஜான்ஸன்[1]