நூற் சுவை
நூற் சுவை குறித்த மேற்கோள்கள்
- நல்ல மேற்கோள் அறிவாளி கை வைர மோதிரம், அறிவிலி கைக் கூழாங்கல். -ஜே.ரூ.[1]
- சுவையின் தூய்மைக்கு உறைகல் எது வெனில் தூய விஷயங்கள் சிலவற்றிலன்றி அனைத்திலும் சுவை காண்பதுவே. -ரஸ்கின்[1]
- நற்சுவை கற்பிப்பதே நல்லொழுக்கம் அமையச் செய்வதாகும். -ரஸ்கின்[1]
- நூற்சுவை அறிவு என்பது யாது? நூல்களின் குணங்களைச் சந்தோஷத்தோடும், குற்றங்களை வருத்தத்தோடும் காணும் மனப்பான்மையே ஆகும். -அடிஸன்[1]
- நல்ல சுவையறிவு குறைகளைப் பாராது, நியாயமான சுவையறிவு குணங்களைத் தேடும். நல்ல சுவையறிவு குறைந்தோ கெட்டோ போகலாம். நியாயமான சுவையறிவு நாளுக்கு நாள் அதிகமாக வளரும். -ஜேமிஸன்[1]
பழமொழிகள்
தொகு* நல்ல சுவையறிவு குணங்களைக் காணும், நியாயமான சுவையறிவு அவற்றின் அளவைக் கணிக்கும்.[1]