நீதித்துறை

சட்டங்களை விளக்குவதோடு அவற்றைப் பயன்படுத்தும் அறமன்றங்களின் அமைப்பு

நீதித்துறை (judiciary, அல்லது அறமன்ற அமைப்பு) என்பது அரசால் இயற்றப்படும் சட்டங்களுக்கு சரியான புரிதல் கொடுத்து அவற்றைச் செயல்படுத்தும் நீதிமன்றங்களின் (அறமன்றங்களின்) அமைப்பாகும்.

மேற்கோள்கள்

தொகு
  • நெடு நாளைக்கு மாற்றப்படாமல் இருக்கக் கூடிய நிலைத்த சட்டங்களைப் பெற்ற நாடு இன்பப் பூமியாக இருக்கும். அப்படியல்லாமல் நீதி முறைகளை அடிக்கடி சிர்திருத்த வேண்டிய நிலையில் உள்ள நாடு மிகுந்த துன்பத்தில் உழலும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
  • வளமை மிகுந்த ஒரு நாட்டின் மக்கள் சோம்பேறிகளாயிருப்பது இயற்கை. அவர்களைச் சுறுசுறுப்புடன் விளங்க வைக்க வேண்டுமானால் கடுமையான சட்டங்கள் தேவை. -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
  • ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தி அதற்குரிய நீதி முறைகளை வகுக்க விரும்புகிற எவரும், எல்லா மனிதர்களும், தீயவர்கள் என்றும், அவர்கள் சமயம் வாய்க்கும்போது தங்கள் தீய குணத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கக் கூடியவர்கள் என்றும் மனத்தில் கொள்ள வேண்டும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
  • மக்கள் நன்னடத்தை உள்ளவர்களாயிருக்க வேண்டுமானால் நல்ல கல்வி கற்றவர்களாயிருக்க வேண்டும். நல்ல கல்வி, நல்ல நீதிமுறை இருந்தால்தான் கிடைக்கும். நல்ல நீதிமுறை, பலரால் பழிக்கப்படும் கலகங்களால்தான் கிடைக்கும். கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நீதித்துறை&oldid=20279" இலிருந்து மீள்விக்கப்பட்டது