நாய்

விலங்கு

நாய் என்பது அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது.

நாய்: சிறியது+பெரியது

மேற்கோள்கள்

தொகு
  • தெய்வமே பெண்ணாக வந்தாலும் அவதூறு என்னும் நாய் அவளைப் பார்த்துக் குரையாமல் இராது. -ஹோம்[1]
  • நாய்க்குச் சுவை உணர்ச்சியும் மோப்ப சக்தியும் அதிகம். யாராவது கோபித்தவுடன் நாய் அவர்கள் கையை நக்கும். இது, தங்களைச் சமாதானப் படுத்துவதற்காக என்று சிலர் நினைக்கிருர்கள். இது சரியல்ல. இன்னும் கோபம் உங்களிடம் இருக்கிறதா என்று சுவையின் மூலம் அறிந்து கொள்ளவே இப்படிச் செய்கிறது. —ஸி. பி. ட்ரேக்[2]

நாய் பற்றிய பழமொழிகள்

தொகு
  • நாய் வாலை நீமித்தமுடியாது
  • இருபது வயது வரை பறவை வாழ்க்கை, சுற்றித் திரிகிறோம். நாற்பது வயது வரை கழுதை வாழ்கை, பொதி சுமக்கிறோம். அறுபது வயது வரை நாய் வாழ்க்கை, அல்லல்​படுகிறோம். எண்பது வரை நத்தை வாழ்க்கை, கூட்டுக்குள் இருக்கிறோம். இறக்கும் வரை கொக்கு வாழ்க்கை, ஒற்றைக் காலில் சாவுக்காகத் தவம் இருக்கிறோம்.
  • எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
  • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா? குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது.
  • அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் ஓதாது (மலையாளப் பழமொழி)
  • கிழட்டு நாய் புதிய தந்திரங்களைக் கற்றுக் கொள்ள முடியாது ( மேனாட்டுப் பழமொழி)

குறிப்புகள்

தொகு
  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/பழி. நூல் 95- 96. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நாய்&oldid=19731" இலிருந்து மீள்விக்கப்பட்டது