நடு நிலை
நடு நிலைமை (Neutrality) குறித்த மேற்கோள்கள்
- பக்கத்தில் உள்ள இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால், நடு நிலைமை வகிப்பதை விட ஏதாவது ஒரு தரப்பில் சேருவதே அறிவுடமையாகும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- தன்னைக் காட்டிலும் வலிமை மிக்கவன் பக்கம் சேர்வதைவிட, தன் உதவியை விரும்பிப் பெறக்கூடியவன் பக்கம் சேர்வதே நன்மை பயக்கும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
- நடுநிலை வகித்தவன் சந்தேகத்திற்குரியவனாகையால் வெற்றி பெற்றவன் அவனை நண்பனாகக் கருதமாட்டான். தோல்வியுற்றவனோ தனக்கு உதவி செய்யாதவனைக் காக்க முன் வரமாட்டான். -நிக்கோலோ மாக்கியவெல்லி[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.