தேர்வு (மதிப்பிடுதல்)
தேர்வு அல்லது பரீட்சை (examination, சுருங்க:exam) என்பது தேர்வுக்குட்பட்ட ஒருவரின் அறிவு, திறன், நாட்டம், உடல் நலத்தகுதியை (அல்லது மற்றவற்றில் வகைப்படுத்துதலுக்காக, காட்டு: நம்பிக்கைகள்) மதிப்பிடுவதாகும்.
மேற்கோள்கள்
தொகு- மரம் ஏறுவதுதான் தேர்வுமுறை என்றாகிவிட்டால், மீன்கள் அதில் தோற்றுப்போகும்; வாழ்நாள் முழுவதும் தாம் முட்டாள் என்ற என்னத்துடனேயே அவை வாழ்ந்து மடியும். -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்[1]
- பெரும்பான்மை இந்தியர்களுக்குச் சுதந்திரமாகச் சிந்திக்கும் ஆற்றலோ, கற்பனைத் திறனோ இல்லை. கற்பதை அப்படியே மூளையில் ஏற்றிக் கொள்கிறார்கள்; தேர்வில் எழுதி பட்டங்களை வெல்கிறார்கள். அவர்களிடம் நிறைய எதிர்ப்பாரக்க முடிவதில்லை. ஸ்டீவ் வாஸ்னியாக்[2]
- தற்போதைய பரீட்சை முறையானது, பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்யும் வழக்கத்தை உருவாக்கியுள்ளது. இது, நாட்டையே ஏமாற்றுவது போன்றதாகும். —தேஷ்முக் (15-6-1960)[3]
குறிப்புகள்
தொகு- ↑ ஒடுக்குமுறைத் தேர்வுகள் (கட்டுரை), சமஸ், இந்து தமிழ் 2020 சனவரி 31
- ↑ ஒடுக்குமுறைத் தேர்வுகள் (கட்டுரை), சமஸ், இந்து தமிழ் 2020 சனவரி 31
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.