துருக்கிய பழமொழிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இப்பகத்தில் துருக்கிய பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • அவர்கள் சகோதரர்களானாலும், அவர்களுடைய பைகள் சகோதரிகளில்லை.
  • ஆரோக்கியமுள்ளவனுக்குத் தினசரி திருமணம்தான்.
  • இளைஞன் வேலைக்கு வருகிறான், கிழவன் உணவுக்கு. வருகிறான்.
  • உடல் நலமுள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்துதான்.
  • கரையைப் பார்த்துச் சீலை எடு, தாயைப் பார்த்து மகளை எடு.
  • குருடர்களின் நடுவில் நீங்களும் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
  • குழந்தையை அடித்து வளர்க்காதவன், பின்னால் தன் மார்பிலே அடித்துக் கொள்ள நேரும்.
  • தகப்பனாவதில் சிரமம் ஒன்றுமில்லை.
  • தன் வீட்டில் அமைதி யில்லாதவன் பூலோக நரகில் இருக்கிறான்.
  • தாய் வெங்காயம், தந்தை உள்ளிப்பூடு, அவன் மட்டும் ரோஜா அத்தர்!
  • நல்ல திராட்சை மதுவைப்போல், பெண்ணும் இனிமையானவிஷம்.
  • நீதிபதி, வைத்தியர் இருவரிடமிருந்தும் இறைவன் என்னைக் காப்பானாக.
  • பத்து மனிதரில் ஒன்பது பேர் பெண்கள்.
    (பெரும்பாலோர் ஆண்மையில்லாதவர்கள்.)
  • விதவையின் வீட்டில் கொழுத்த சுண்டெலி இராது.
"https://ta.wikiquote.org/w/index.php?title=துருக்கிய_பழமொழிகள்&oldid=37971" இலிருந்து மீள்விக்கப்பட்டது