திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும். திருமணத்திற்கு மகத்துவம் மாங்கல்யம். மாங்கல்யத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. மாங்கல்யதை அக்னியில் இடுவது வம்சத்தை அழிக்கும், இல்லம் அமைதியற்ற நிலை உண்டாகும்.

ஒரு தமிழர் திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது
ஒரு திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது

மணவாழ்வின் மாட்சி உணர்த்தும் பொன்மொழிகள் தொகு

 • சமூகத்தின் முதல் உறவு - இணைப்பு, திருமணம் - சிசரோ
 • உலகியல் வாழ்வில் கல்வி (அறிவு) புகட்டும் அமைப்புகளில் தலையானது இல்லறம் - சேனிங் போல்லாக்
 • திருமணவாழ்வில் ஈடுபடும்வரை, ஒருவரின் குணநலன் பக்குவமாகி நிறைவுபெறுவதில்லை - சார்லஸ் சிம்மன்ஸ்
 • இருமனங்களின் இணைப்பாகும் திருமணம், ஈருடலின் சேர்க்கையைவிட சிறப்பானது.- டெசிடேரியல் ஏராஸ்மாஸ்
 • பெண்கள் இன்றி மணவாழ்வு இயலாது, பெண்கள் இன்றி உலகம் இயங்கவும் இயலாது, புலனடக்கம் இல்லா நெறிகெட்ட வாழ்வுக்கு மருந்து திருமணம். - மார்டின் லூதர்
 • திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. - ஜான் லைலி
 • திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் - அவை இன்னமும் (என்றும்) இன்பமாக இருக்கவேண்டுமே! - தாமஸ்சதேர்ன்
 • திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால், மணமுறிவு எங்கே நிச்சயிக்கப்படுகிறது? - யாரோ
 • தனி மனிதனாய் வாழ்வதைவிட மணவாழ்வில் கவர்ச்சி குறைவு ஆனால் கண்ணியமும் பாதுகாப்பும் அதிலேதான் உள்ளது. - ஜெரேமி டெய்லர்
 • நமது வயது வளர வளர, திருமணம் என்ற அமைப்பின் அருமையை உணர்ந்து உவக்கிறோம். -சர் தாமஸ் பீச்சேம்
 • ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சுதந்திரம் சமாதானமாகவும், சார்பு தோழமை கொண்டதாகவும், கடமை உணர்வு இருதரப்பினதாகவும் ( ஒத்த உரிமை, ஒத்த சார்பு, ஒத்த கடமை ) அமையும் உறவுதான் திருமணவாழ்வு. -லூயிஸ் ஆன்ஸ்பேச்சர்
 • மனிதன் வாழ்வில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் திருமணம்தான் அவன் சொந்த (உரிமை) நடவடிக்கை. மற்றவர்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆயினும், மற்றவர்கள் பெரிதும் தலையிடுவது நமது திருமணம் பற்றிதான். -ஜான் செல்டென்
 • திருமண வாழ்வில் இன்னல்கள் பல உண்டு. ஆனால் தனியாளாக வாழ்வதில் இன்பம் ஏதுமில்லை. - சேம்யல் ஜான்சன்
 • உலகில் தலையாய இன்பம் திருமணம். இன்பமான மண வாழ்க்கையை நடத்தும் ஒவ்வருவரும், மற்றவை யாவற்றிலும் தோல்வி அடைந்திருந்தாலும், உண்மையில் (வாழ்வில்) வெற்றி பெற்றவராவாரே ஆவார். - வில்லியம் லையான் ஃபல்ப்ஸ்
 • பெண்ணின் (மனைவியின்) அன்பில் பின்னிப் பிணைந்த ஆணுக்கு உரித்ததாகக் காத்து நிற்கும் ஆறுதல்கள், ஆழ்கடலின் முத்துக்களைக் காட்டிலும் மதிப்பு மிக்கவை. இல்லத்தின் அருகே வரும்போதே இனிய அருட்கொடையின் தென்றல் அவனை ஆட்கொள்கிறது. - தாமஸ் மிடில்ஸ்டன்
 • வெற்றி என்னும் பாதை நெடுக, தங்கள் கணவன் மார்களை - (ஊக்குவித்து) உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் மனைவியரைக் காணலாம். - தாமஸ் ராபர்ட் திவார்
 • சச்ரவுகள் (ஊடல்கள்) இழையோடும் ஒரு நீண்ட (வாழ்நாள் எல்லாம் நீடிக்கும்) உரையாடல்தான் திருமண வாழ்வு. - ராப்ர்ட் லூயி ஸ்டீவன்சன
 • திருமணத்தில் நிறையும் காதல், கண்ணியமிக்க பெருமதிப்பை அடிப்படையாக்க் கொண்டது. - எலைஜா ஃபெண்டன்
 • திருமணத்தைப் புனிதப்படுத்த வல்லது காதல் ஒன்றுதான். காதலால் புனிதமாகிய மணமே உண்மையான திருமணம். - லியோ டால்ஸ்டாய்
 • திருமணத்தை நிலைக்கச் செய்வது உடல் அல்ல; உள்ளம் - புப்லியஸ் சைரஸ்
 • ஆண்பெண் இரு பாலும் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் என்று. இருபாலும் அன்புடனும் விவேகத்துடனும் இணைந்து வாழ்வதன் மூலம்தான், பூரண உடல் தலனும், கடமையில் ஆர்வமும், இன்ப நிறைவும் எதிர்பார்க்க முடியும். - வில்லியம் ஹால்
 • ஒரு பேரறிஞர் கூறியதுபோன்று, சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல; சரியான வாழ்க்கைத் துணையாய் நடந்து கொள்வதே முக்கியம். - டொனால்ட் பீயட்டி
 • இனிய திருமண வாழ்க்கை நடத்த விழைந்தால் இரண்டு கருத்துக்களை உள்ளம் கொள்ளக! கொள்கைகளைப் பொருத்தவரை, குன்றுபோல் நில். சுவைகள் (ரசனைகள்) பொருத்வரையில், பிரரது விருப்பங்களைத் தழுவி நில். - தாமஸ் ஜெஃபர்சன்
 • திருமணம் வாழ்க்கையின் இயற்கை நியதி. அதை எவ்வகையிலும் இழிவானது என்று கருதுவது முற்றிலும் தவறு. திருமணத்தைப் புனித உடன்பாடு ஆகக் கருதி, இல்லறத்தில் சுயகட்டுப்பாடு காத்து வாழ்வதே உத்தமம். - காந்தியடிகள்
 • திருமணம் பெற்றோர்களால் பணத்துக்காக - செல்வத்துக்காகச் செய்யும் ஏற்பாடாக இருப்பது ஒழிய வேண்டும். - காந்தியடிகள்
 • ஒன்றாக இணைந்து நின்று, உலக வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்பத்துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, ஒன்றாகவே முதுமை எய்திய தம்பதியருள் பலர், உடல் தோற்றாத்தாலும், குரல் எடுப்பிலும் வியத்தகு அளவில் ஒன்றே போலாகி; கடற்கரையில் கிடக்கும் இரண்டு கூழாங் கள்கள் அலைகளின் வீச்சில் உருண்டுருண்டு, ஒன்றைப்போல் மற்றொன்றும் ஆவதைப்போலப் போலவே - ஒருவரின் மறுபதிப்பாய் மற்றவரும் ஆகிவிடுகின்றனர். (தோற்றத்திலும் குரலிலும் இல்லாவிடிலும், ஒருவர் எண்ணத்தை மற்றவர் பிரதிபளிப்பதில் அவ்வாறு ஆகின்றனர்.) - அலெக்சாண்டர் சிமித்
 • ஏழிசையின் இனிமைதனை, மானிடர் கேட்டு இன்புற்று மகிழ்ந்து இருக்கின்றனர்; இசை கேட்ட நாகமும் தீட்ண்டாதாம், நஞ்சு கொண்டதெனினும்! வாழ்க்கையே, அது போன்றதுதான். அளவு, தெடர்பு அறிந்து வினை செய்து, எதற்கும் முறை வகுத்து, இன்பம் காண்பது வாழ்வு; அதிவும் மூழ்கிச் செயலாற்றுப் போக அல்ல; அது மடமை! துய்த்திடலாம் வாழ்வின் சுவை; துஞ்சிட அல்ல; வினை மேற்கொள்ள; தொடர்ந்து செயலாற்ற; ஏனெனில் இயங்குதல் வாழ்க்கையின் இலக்கணம்; இனியன புரிதல் அறநெறியாகும்; அறநெறியதனை அடவி ஏற்காமல், மாடும் மனையும் சூழ இருந்திடும் மாண்புமிகு இல்லறந் தன்னிலேயே பெற்றிட இயலும் என்று கூறினர் தமிழர்; துறவோரும், இவரில்லை எனில் இல்லை யாங்கண் என்றார் உணர்ந்து. - அண்ணாதுரை
 • திருமணத்தில் உள்ள மகிழ்ச்சியானது முற்றிலும் வாய்ப்பினை பொறுத்த விஷயம. ஜோன் ஆஸ்டின்[1]

மேற்கோள் தொகு

தமிழர் திருமணமும் இனமானமும், பேராசிரியர் க. அன்பழகன். பூம்புகார் பதிப்கம்,இரண்டாம் பதிப்பு 1994

வெளி இணைப்புக்கள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் திருமணம் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=திருமணம்&oldid=34972" இலிருந்து மீள்விக்கப்பட்டது