தாவீது
தாவீது இசுரயேலின் அரசர் ஆவார். இஸ்லாத்தில் இறைத்தூதர் கருதப்படுகிறார்,
மேற்கோள்கள்
தொகு- அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்; அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்
- திருப்பாடல்கள் 1:1 முதல் 5 வரை
- என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
- திருப்பாடல்கள் 51:2 முதல் 4 வரை
- இறைவா! நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்; என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும். உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்; என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்.
- திருப்பாடல்கள் 139:23 முதல் 24 வரை
- சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உளம் உடைந்து போனது!
எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது நீ பொழிந்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ! [2]
- சாமுவேல் - இரண்டாம் நூல் 1:26
- உம் அடியானாகிய நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது கரடியோ மந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடினால், நான் பின்தொடர்ந்து ஓடி, அதை அடித்து, அதன் வாயினின்று ஆட்டை விடுவிப்பேன்; அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியைப் பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன். உம் அடியானாகிய நான் சிங்கங்களையும் கரடிகளையும் இவ்வாறு கொன்றிருக்கிறேன்; [...........]என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்" என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், "சென்று வா! ஆண்டவர் உன்னோடு இருப்பார் [3]
- சாமுவேல் - முதலாம் நூல் 17:33 முதல் 37 வரை
தாவீதை பற்றிய மேற்கோள்கள்
தொகு- பின்பு யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார்; ஏனெனில் அவரைத் தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார். யோனத்தான் தாம் அணிந்திருந்த மேலங்கியைக் கழற்றித் தாவீதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி, வாள், வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார்.
- சாமுவேல் - முதலாம் நூல் 18:3; 4 [4]