தவறுகள்
தவறுகள் தவிர்க்க முடியாத நிகழ்வுகள், ஒரு மனிதர் தற்செயலாக தீவாய்ப்பு ஏற்படக்ககூடிய ஒன்றைச் செய்துவிடுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- எந்த மனிதனும் தவறு செய்யக்கூடும்; ஆனால், முட்டாளை, தவிர வேறு எவனும் அதைத் தொடர்ந்து செய்ய மாட்டான். -ஸிஸரோ[1]
- எந்த மனிதனும் பல தவறுகளையும். பெரிய தவறுகளையும் செய்யாமல் பெருமையுடையவனாகவோ, நல்லவனாகவே ஆனதில்லை. - கிளாட்ஸ்டன்[1]
- குற்றமே செய்யாமல் இருப்பவர்கள் இறந்து போனவர்களே. - லேலண்ட்[1]
- விஞ்ஞானம் முழுவதிலும் தவறுதான் உண்மைக்கு முன்னால் செல்லும். உண்மைக்குப் பின்னால் கடைசியாக நிற்காமல், அது முன்னால் போவதே நலம். - வால்போஸ்[1]
- கீழே விழாமல் இருத்தல் நமக்குப் பெரிய பெருமையன்று ஆனால், விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருத்தலே பெருமை. - கன்ஃபூஸியஸ்[1]
- தெரியாமல் செய்த பிழைக்கு நாம் அனுதாபம் காட்ட வேண்டும். ஏளனம் செய்யக்கூடாது. செஸ்டர்ஃபீல்ட்[1]