தலைமைத்துவம்

  • பாதை எங்கு இட்டுச் செல்கிறதோ அங்கு செல்லாதீர்கள்; மாறாக, பாதையே இல்லாத இடத்திற்குச் சென்று பாதைச் சுவட்டை விட்டு விட்டு வாருங்கள். -- Do not follow where the path may lead. Go instead where there is no path and leave a trail. -- Harold R. McAlindon.
  • தலைவன் என்பவன் நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்த வணிகன். - A leader is a dealer in hope. -- Napoleon Bonaparte
  • முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள் கட்டளையிடும் பணி தானாக வந்துசேரும்- விவேகானந்தர்
  • தீர்க்க தரிசியாய் இருப்பவர்கள் தமக்கு உண்மை எனத் தோன்றியதைக் கடைசி வரையில் தாம் கல்லால் அடிக்கப்பட்டு சாக நேரிட்டாலும் கடைப்பிடிக்கலாம். ஆனால் நாட்டுத் தலைவனாக இருப்பவன் பல நிலைமைகளுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. -ஜவகர்லால் நேரு[1]
  • பின்பற்றுவோர் இல்லாத தலைவர்கள் அதிவிரைவில் அழிந்து போவார்கள். அதனால் ஒரு பெருந்தொல்லையும் விளையாது. -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]
  • பொதுமக்கள், மேலும் சிறப்பாய் வாழலாமென்று தங்கள் தலைவர்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் அதில் ஏமாற்றமே அடைகிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]

வெளி இணைப்புக்கள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் தலைமைத்துவம் என்ற சொல்லையும் பார்க்க.


குறிப்புகள் தொகு

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 23. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. 2.0 2.1 நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தலைமைத்துவம்&oldid=20261" இருந்து மீள்விக்கப்பட்டது