தனுஷ்

சர்வதேச நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் ,இயக்குனர்

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  • 24 மணி நேரமும் நமக்காக ஒரு ஜீவன் வேண்டிட்டு இருக்கிறது என்றால் அது தாய் தான்[1]

நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

தொகு
  1. நல்லவனாக நடித்து போர் அடித்துவிட்டது. தினமலர் (18 டிசம்பர் 2015). Retrieved on 6 சூன் 2016.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தனுஷ்&oldid=14738" இலிருந்து மீள்விக்கப்பட்டது