டோனி ராபின்ஸ்
எழுத்தாளர், நடிகர், தொழில்முறை பேச்சாளர்
டோனி ராபின்ஸ் (Tony Robbins பிறப்பு 29, பெப்ரவரி 1960) என்பவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் கொடையாளர். மெய்யியலாளர் ஆவார். இவர் தனது சுய முன்னேற்ற புத்தகங்கள் மற்றும் கருத்தரங்குகளின் வாயிலாக புகழ்பெற்றவராக அறியப்படுகிறார். 2007-ஆம் ஆண்டில், புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழின் பிரபலங்கள் 100 பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றது.
இவரது பொன்மொழிகள்
தொகு- இலக்குகளை அமைத்துக்கொள்வதே புலனாகாதவற்றையும் புலப்படக்கூடியதாக மாற்றுவதற்கான முதல்படி
- உங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய செயல்பாடு என்ற உண்மையின் மூலமாகவே ஒரு உண்மையான முடிவு அளவிடப்படுகிறது.
- நீங்கள் முடிவெடுக்கும் தருணங்களிலேயே உங்களது விதி வடிவம் பெறுகின்றது.
- உங்களது கற்பனை மற்றும் அர்ப்பணிப்பு மட்டுமே உங்கள் தாக்கத்திற்கான எல்லை.
- எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், உண்மையில் உங்களால் எதுவும் தீர்மானிக்கப் படவில்லை.
- உங்கள் முடிவுகளில் உறுதியாக இருங்கள் ஆனால், உங்கள் அணுகுமுறையில் நெகிழ்வாக இருங்கள்.
- வெற்றிகரமான மக்கள் சிறந்த கேள்விகளை கேட்கிறார்கள், அதன்மூலம் அவர்கள் சிறந்த பதில்களைப் பெறுகிறார்கள்.
- மகிழ்ச்சி மற்றும் துன்பம் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதே வெற்றிக்கான இரகசியம்.
- தோல்வி என்பதைப் போன்ற விஷயம் எதுவுமில்லை. முடிவுகள் மட்டுமே உள்ளன.
- பெருந்திரளான, உறுதியான செயல்பாட்டினை மேற்கொள்வதே வெற்றிக்கான பாதை.
- அர்ப்பணிப்பு இல்லாமல் எவ்வித நிரந்தர வெற்றியும் இல்லை.
- என்ன நடந்தாலும், பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள்.
- ஆர்வத்துடன் வாழ்க்கையை வாழுங்கள்.
- எப்போதுமே வழி உள்ளது நீங்கள் உறுதியாக இருந்தால்.
- பேரார்வமே மேதைகளின் தோற்றமாக உள்ளது.
- என்ன நடந்தாலும், பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள்.