டென்மார்க் பழமொழிகள்

இதில் டென்மார்க் நாட்டில் வழங்ங்கப்படும் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • அண்டை அயலான் தயவில்லாமல் எவனும் வாழ முடியாது.
  • அதிருஷ்டம் சிலருக்கே உண்டு, மரணம் எல்லோர்க்கும். உண்டு.
  • அன்பான சில வார்த்தைகளே பெண்ணுக்கு அணிகலன்.
  • குருடன் பார்க்க முடியவில்லை என்பதால், வானத்தின் நீல நிறம் குறைந்து விடுவதில்லை.
  • குழந்தைகளும் குடிகாரர்களும் உண்மையே பேசுவர்.
  • குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை.
  • செல்லக் குழந்தைக்குப் பல பெயர்கள் இருக்கும்.
  • பணக்காரியான விதவையின் கண்ணீர் விரைவில் உலர்ந்து விடும்.
  • பிணி ஒவ்வொரு மனிதனுக்கும் யஜமானன்.
  • பெண்ணுக்கு மௌனத்தைப் போன்ற ஆபரணம் வேறில்லை, ஆனால் அவள் அதை அணிவது அபூர்வம்.
  • மரணம் கொம்பு ஊதிக் கொண்டு வருவதில்லை.
  • மூன்று பேர்களின் பக்கத்தில் குடியிருக்க வேண்டாம்: பெரிய நதிகள், பெரிய பிரபுக்கள், பெரிய சாலைகள்.
  • வழித்துணைக்கு முதுமை ஏற்றதன்று.
"https://ta.wikiquote.org/w/index.php?title=டென்மார்க்_பழமொழிகள்&oldid=38016" இலிருந்து மீள்விக்கப்பட்டது