ஜோதிராவ் புலே
இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்
மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே (ஏப்ரல் 11, 1827 - நவம்பர் 28 1890 ) ஒரு சமூக சீர்திருத்தவாதி. சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.
மேற்கோள்கள்
தொகு- அறிவில்லாதபோது புத்திசாலித்தனம் இழக்கப்படுகிறது. புத்தியில்லாதபோது ஒழுக்கம் இழக்கப்படுகிறது. ஒழுக்கம் இல்லாதபோது ஆற்றல் முழுதும் இழக்கப்படுகிறது. செயல்படும் ஆற்றல் இல்லாதபோது பணம் இழக்கப்படுகிறது. பணம் இல்லாததால் சூத்திரர்கள் வீழ்ந்தனர். கல்வியறிவு இல்லாததால் இவ்வளவு கஷ்டங்களும் ஏற்பட்டன.[1]
சான்றுகள்
தொகு- ↑ "ஜோதிராவ் புலேயின் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்" புத்தகத்தில் இருந்து. பக்கம் 170