ஜோக்கர்

ராஜு முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஜோக்கர் என்பது 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான அரசியல் மற்றும் சமூக பகடித் திரைப்படமாகும். ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்திரி, பாவா செல்லதுரை, ராமசாமி போன்றவர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் சில உரையாடல்கள் [1] தொகு

  • நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?
  • ஜனாதிபதி வீட்டு கரன்ட் பில்லு எவ்ளோனு கேட்டாக் கூட சொல்லணும்.
  • சகாயம் பண்ணுங்கன்னு சொல்லலை... சகாயம் மாதிரி பண்ணுங்கன்னு தான் சொல்றோம்.
  • இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னு பார்த்தா... இப்போ பேள்றதையும் கஷ்டமாக்கிட்டானுங் களே!...
  • குண்டு வைக்கிற வனையெல்லாம் விட்டுருங்க, உண்டக்கட்டி வாங்கி தின்னுட்டு கோயில் வாசல்ல தூங்குறவனப் புடிங்க.
  • உழைக்கிறவன் வண்டியைத் தான போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வெச்சுக்கிடுது? எந்த ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூ.வோ துருப்பிடிச்சு நின்னுட் டிருக்கா?
  • கக்கூஸ் கட்டுன காசு நாறாது.
  • சூப்பர் சிங்கர்ல நம்ம புள்ள கலந்துக்கணும்... அதைப் பார்த்து நாம அழுவணும்... அதை டி.வி.ல காட்டணும்!
  • அவ அப்பா மார் சளிக்காக குடிக்கிறாரு, என் புருசன் நான் மார்ல அடிச்சிக் கணும்னு குடிக்கிறான்.
  • இப்போல்லாம் ஹீரோவை விட வில்லனைத்தான் சனங்களுக்குப் பிடிக்குது.
  • உங்களுக்காகப் போராடுற எங்களைப் பார்த்தா பைத்தியக் காரன்னு தோணுச்சுன்னா... அது எங்க தப்பில்ல!

குறிப்புகள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜோக்கர்&oldid=14486" இலிருந்து மீள்விக்கப்பட்டது