ஜே. பி. எஸ். ஹால்டேன்

மரபியல் நிபுணர் மற்றும் பரிணாம உயிரியலாளர் (1892-1964)

ஜான் பர்டன் சாண்டெர்சன் ஹால்டேன் (John Burdon Sanderson Haldane) நவம்பர் 5, 1892  – திசம்பர் 1, 1964) என்பவர் பிரிட்டனில்-பிறந்த ஒரு அறிவியலாளர் ஆவார். இவர் உடலியங்கியல், மரபியல், பரிணாம உயிரியல், கணிதம் ஆகியவற்றின் ஆய்வுகளில் இவரது பணிக்காக அறியப்பட்உகிறார்.

ஜே. பி. எஸ். ஹால்டேன் (1914)

மேற்கோள்கள்

தொகு
  • எனக்குப் பின்னர் உலகம் என்னைப்பற்றி நல்லதோ, கெட்டதோ எது வேண்டுமானலும் சொல்லி விட்டுப் போகட்டும். தனிப்பட்ட முறையில் விஞ்ஞான உலகம் எனக்குக் கவிபாட வேண்டும் என நான் விரும்பவில்லை. நான் கண்டறிந்த உண்மைகள் வளர்ந்து வரும் விஞ்ஞான சம்பிரதாயத்தில் ஒன்றி இணையுமானால் அதைக் காட்டிலும் எனக்குத் திருப்தியளிக்கக் கூடிய வேறு எதுவும் இல்லை.[1]
  • ஆரோக்கியத்தைப்பற்றி இன்னும் அறிய வேண்டியவை ஏராளமாயுள்ளன. ஆயினும் இதுவரை சிலருக்கு மட்டும் தெரிந்துள்ள விஷயங்கள் எல்லா மக்களுக்கும் தெரிந்திருந் தால், நம் சராசரி வயது இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் கூடக்கூடும்.[2]

குறிப்புகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 88-90. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜே._பி._எஸ்._ஹால்டேன்&oldid=38201" இலிருந்து மீள்விக்கப்பட்டது