ஜே. சி. குமரப்பா

தமிழ் பொருளியல் அறிஞர்கள்

ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா (Joseph Chelladurai Cornelius Kumarappa; சனவரி 4, 1892 – சனவரி 30, 1960) என்னும் முழுப்பெயர் கொண்ட ஜே. சி. குமரப்பா என்பவர் காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர் எனக் கருதப்படுபவர்.

மேற்கோள்கள்

தொகு
  • மனித வாழ்க்கையானது 'வாழ்தல்' என்ற நிலையில் இருந்து 'உயிரோடு இருத்தல்' அல்லது 'பிழைத்திருத்தல்' என்ற கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.[1]
  • எல்லோரும் ஏற்றுக் கடைபிடிக்கிற வாழ்க்கைத் தரத்திலிருந்து சற்று விலகினாலும் மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றியே மக்கள் கவலைப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கைகூட மேட்டுதர மக்களின் தொழில், வர்தக நிறுவனங்கள் ஆகியவற்றால் வரையருக்கப்படுகின்ற புறத்தோற்றங்களாலும் நடப்பு வழக்குகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.[1]
  • வெளிநாட்டுப் பொருட்களையும் பெரும் ஆலைகளில் உருவான பொருட்களையும் நிராகரித்து, நமக்கு அருகிலிருப்பவர்கள் உருவாக்கிய பொருட்களை வாங்கவது என்ற முடிவை நாம் உறுதியாக எடுத்துவிட்டால் சந்தை ஆதாய சக்திகள் தங்கள் கடையை ஏறக்கட்டுவரைத் தவிர வேறு வழி இல்லை.[1]
  • இயந்திரங்களின் வரவானது சிரமங்களை நீக்கலாம். ஆனால் அவை நமது வாழ்விலிருந்து மனிதத்தன்மையை நீக்கிவிடக் கூடாது. கருவிகள் நமக்கு அடிமையாக இருக்கலாமே தவிர, நமது உரிமையாளராக ஒருபோதும் மாறக் கூடாது.[1]
  • நமது செயல்பாட்டின் விளைவாக பொருளாதார முன்னேற்றம் குறைவாக இருந்தாலும் நல்லெண்ணம், அமைதி, மனநிறைவு ஏற்படுமானால் நாம் முன்னேற்றத்தின் பக்கம் இருப்பதாகவே கருதலாம். நாம் நிறைய பொருள் வளம் பெற்றிருந்தாலும் சமூகத்தில் மனநிறைவின்மையும் மோதலும் இருக்கமானால் நாம் பின்னோக்கி போகிறோம் என்பது பொருள்.[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 சாளை பஷீர் (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ் நாளிதழ். pp. 196-202. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜே._சி._குமரப்பா&oldid=36845" இலிருந்து மீள்விக்கப்பட்டது