ஜேரட் டயமண்ட்

ஜேரட் டயமண்ட் அல்லது ஜாரெட் டயமண்ட் (Jared Diamond, பி. செப்டம்பர் 10, 1937) ஒரு அமெரிக்க அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர். தனது அறிவியல் அபுனைவு படைப்புகளில் பல அறிவியல் துறைகளைப் பற்றி எழுதியுள்ளர். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (யுசிஎலஏ) புவியியல் மற்றும் உடற்செயலியல் பேராசிரியராக உள்ளார். தி தர்ட் சிம்பான்சி, கன்ஸ், ஜெர்ம்ஸ் அண்ட் ஸ்டீல், கொலாப்ஸ் போன்ற இவரது வெகுஜன அறிவியல் புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை. புலிட்சர் பரிசு, அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம், உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

ஜேரட் டயமண்ட் (2007)

மேற்கோள்கள்

தொகு
  • கி.மு. 3000த்தில் எழுதுகிற முறை தோன்றுவதற்கு முந்தைய வரலாறு குறைந்த அளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனினும் அதுதான் ஐம்பது லட்சம் ஆண்டுகள் கொண்ட மனித இன வரலாற்றின் 99.9 சதவீதத்தை உள்ளடக்கியிருக்கிறது.[1]
  • வெவ்வேறு மக்களுக்கு வரலாறு வெவ்வேறாகப் பின் தொடர்ந்தது; இதற்கு மக்களின் சூழ்நிலைமகளில் இருந்த வேறுபாடுகள் தான் காரணமே தவிர மக்களுக்குள்ளேயே இருந்த உயிரியல் வேறுபாடுகள் காரணமல்ல.[2]

சான்றுகள்

தொகு
  1. "'துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு", பக்கம் 11 (தமிழ் மொழிபெயர்ப்பு)
  2. "'துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு", பக்கம் 33 (தமிழ் மொழிபெயர்ப்பு)

புற இணைப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
 
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜேரட்_டயமண்ட்&oldid=36969" இலிருந்து மீள்விக்கப்பட்டது