ஜேன் ஆஸ்டின்

ஜேன் ஆஸ்டின் (Jane Austen, டிசம்பர் 16, 1775 – ஜூலை 18, 1817) ஒரு பிரிட்டானியப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய நடுத்தர மக்களைப் பற்றிய நேசப் புனைவுகள் ஆங்கில இலக்கிய உலகில் இவருக்கு அழியாத இடத்தைத் தந்துள்ளன. இவரது புதினங்களில் காணப்படும் யதார்த்தவாதமும், கூர்மையான சமூக விமர்சனமும் வெகுஜன வாசகர்களிடம் மட்டுமல்லாது விமர்சகர்களிடமும், இலக்கிய ஆய்வாளர்களிடமும் இவருக்கு பெரும் மதிப்பைப் பெற்றுத்தந்துள்ளன.

ஜேன் ஆஸ்டின் அவர்களின் சகோதரி கேசன்ட்ரா ஆஸ்டினால் வரையப்பட்ட உருவபடம் (c. 1810)

அவரது பொன்மொழிகள்[1] தொகு

  • வீட்டில் தங்கியிருக்கும்போது உள்ளது போன்ற சுகம் வேறு எங்கும் இல்லை.
  • இதயத்தின் மென்மைக்கு இணையான வசீகரம் வேறு எங்குமில்லை.
  • ஒரு கலைஞனால் அழகில்லாத எதையும் செய்ய முடியாது.
  • திருமணத்தில் உள்ள மகிழ்ச்சியானது முற்றிலும் வாய்ப்பினை பொறுத்த விஷயம்.
  • இந்த உலகின் ஒரு பாதியால் மற்ற பாதியின் மகிழ்ச்சியை புரிந்துகொள்ள முடிவதில்லை.
  • எங்கு ஒரு கருத்து பொதுவானதாக உள்ளதோ, வழக்கமாக அது சரியானதாகவே இருக்கின்றது.
  • செய்வதற்கு சரியான செயலை மிக விரைவாக செய்ய முடியாது.
  • நான் கேள்விப்பட்டவரையில் மிகப்பெரிய வருமானம் என்பது மகிழ்ச்சிக்கான சிறந்த செயல்முறையாக உள்ளது.
  • திறமையான நன்கு தகவலறிந்தவர்களின் சகவாசமே நல்ல சகவாசம் என்பதே என் கருத்து.
  • தற்பெருமை பலவீனமான தலைமையில் செயலாற்றி, ஒவ்வொரு வகையான குழப்பத்தையும் உருவாக்குகின்றது.
  • கடந்தகால நினைவுகூர்தல் உங்களுக்கு மகிழ்ச்சியளித்தால் மட்டும் அதைப்பற்றி நினையுங்கள்.
  • ஒருவருடைய வழிமுறை மற்றொருவருடையதைவிட சிறந்ததாக இருக்கலாம். ஆனால், நம்முடைய தனிப்பட்ட சிறந்ததை நாம் விரும்ப வேண்டும்.

வெளி இணைப்புக்கள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜேன்_ஆஸ்டின்&oldid=14451" இலிருந்து மீள்விக்கப்பட்டது