ஜெ. ஜெயலலிதா

இந்திய நடிகை மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்

ஜெ. ஜெயலலிதா (பிப்ரவரி 24, 1948-டிசம்பர் 05, 2016) பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் மறைந்த தமிழக முதல்வரும்,ஆவார்.

ஜெ. ஜெயலலிதா(2009)

மேற்கோள்கள்

தொகு

நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு
  • சிவந்த மேனி, தெளிவான முகம், அழகிய கண்கள், ஆங்கிலத்தில் புலமை, நடனத்தில் தேர்ச்சி, நடையில் கம்பீரம், நினைவாற்றலில் புலி...! - ஆரம்ப காலத்தில் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது ஜெயலலிதாவைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]
  • நான்கு பக்க வசனமானாலும், ஒரு தடவை தெளிவாகப் படிக்கச் சொல்லிக் கேட்டு, மனத்தில் அப்படியே பதியவைத்து, பதற்றமில்லாமல், தெளிவாக உச்சரித்து நடிப்பார். நடனக் காட்சிகளில் எவ்வளவு பெரிய அடவு ஆனாலும் சரி, டான்ஸ் மாஸ்டர் ஆடிக்காட்டுவதை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, உடனே ஆடிவிடுவார் - ஆரம்ப காலத்தில் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது ஜெயலலிதாவைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]
  • அவரது தனிச் சிறப்பாக நான் கருதுவது, அவரது அசாத்தியத் துணிச்சல். உடனுக்குடன் தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன்; அந்த முடிவு தனக்குச் சாதகமாக அமைந்தாலும், பாதகமாக அமைந்தாலும் இரண்டுக்கும் தானே பொறுப்பு என்று சொல்லும் தைரியம். - ஜெயலலிதாவைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 343-347. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜெ._ஜெயலலிதா&oldid=37962" இலிருந்து மீள்விக்கப்பட்டது