ஜெர்மனி பழமொழிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இதில் ஜெர்மனி மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

 • அண்டை வீட்டுக்காரருக்கு நஷ்டமில்லாமல் நாம் அடையும் இலாபமே இலாபம்.
 • அழகிய பெண் செய்வதெல்லாம் சரிதான்.
 • அழகைக் காதலித்தல் என்பதில்லை, காதலித்ததே அழகாகும்.
 • ஆயுதங்களையும், பெண்களையும், பூட்டுக்களையும் தினந்தோறும் பார்த்துவர வேண்டும்.
 • ஒவ்வொரு மணியும் (நேரமும்) நம்மைக் காயப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது, கடைசி மணி அடித்தவுடன் ஆவி பிரிகின்றது.
 • ஒரு கன்னி எதையும் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது.
 • ஒரு சேவல் பன்னிரண்டு கோழிகளை அடக்கியாளும், ஒரு பெண் ஆறு ஆடவர்களை அடக்கியாள்வாள்.
 • கண்ணாடிக்குள் இருக்கும் பெண்ணையே ஒவ்வொரு பெண்ணும் நேசிக்கிறாள்.
 • கன்னிப் பருவம் கதிரவன், கற்பு சந்திரன், விவாகம் இரவு.
 • கன்னிப் பருவம் சாந்திமயம், கற்பு முக்தி நிலை, விவாகம் சிறைவாசம்.
 • காதலர்களுக்குத் தக்க நேரம் தெரியும்.
 • காதலர்களுக்கு காதவழி ஓர் அடியாகத் தோன்றும்.
 • காதலர்கள் நேரத்தை ஆசையைக் கொண்டு அளக்கின்றனர்.
 • காதலர்கள் பேச வேண்டிய விஷயம் அதிகம், ஆனால் அது ஒரே பழைய விஷயம்தான்.
 • காதலின் உச்சத்தில் பேச்சுக் குறைந்து விடும்.
 • காதலின் கண்ணுக்கு ரோஜா மலர் தான் தெரியும், முட்கள் தெரியமாட்டா.
 • காதலுக்குக் காலம் கிடையாது.
 • காதல் அணைந்தபின் கரித்துண்டுகளே மிஞ்சும்.
 • காதல் அகழெலி, கல்யாணம் காட்டுப் பூனை.
 • காதல் குருடன்று, ஆனால் அது பார்ப்பதில்லை.
 • காதல்தான் காதலை வெல்ல முடியும்.
 • காதற் கடிதங்களுக்குத் தேதி தேவையில்லை.
 • காப்பியும் காதலும் சூடா யிருந்தால்தான் உருசி
 • சிறு ஊடல் காதலைப் புதுப்பிக்கும்.
 • தனியாயிருக்கும் பிரமசாரி மயில், காதல் புரிய ஒரு கன்னி கிடைத்தவன் சிங்கம், கலியாணமானவன் கழுதை
 • துணையில்லாமல் செல்லும் பெண்ணுக்கு எல்லோரும் துணையாகச் சுற்றுவார்கள்.
 • பன்னிரண்டு வயதில் குழந்தைப் பருவத்தைப் புதைக்கிறோம்; பதினெட்டில் வாலிபப் பருவத்தையும், இருபதில் முதற் காதலையும், முப்பதில் மனிதரிடம் கொண்ட நம்பிக்கையையும், அறுபதிலிருந்து சிறிது சிறிதாக ஐம்புலன்களையும் புதைத்து விடுகிறோம்.
 • பேட்டையிலும் காதலிலும் ஒருவருக்குத் தொடங்கத் தெரியும், எங்கு முடிப்பது என்பது தெரியாது.
 • மரணத்தைப் பற்றிச் சிந்திப்பவன் வாழத் தொடங்குகிறான் .
 • மனிதர்களுக்குக் குணத்திற்கு முன்னால் அறிவு தேவை; பெண்களுக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை.
 • மனிதன் தனக்குள் ஒரு கொடிய விலங்கை வைத்திருக்கிறான்
 • வாழ்க்கை நமக்கே அளிக்கபெற்றதன்று, இரவலாக வந்தது.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜெர்மனி_பழமொழிகள்&oldid=37381" இருந்து மீள்விக்கப்பட்டது