ஜிம் கார்பெட்
ஜிம் கார்பெட் (Jim Corbett, சூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) என்பவர் இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர். புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது வேட்டை இலக்கிய நூல்களுக்காகப் புகழ்பெற்றவர்.
மேற்கோள்கள்
தொகு- இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு என் வேண்டுகோள் இதுதான் "உங்கள் வருங்காலச் சந்ததியினருக்குத் தூய்மையான காட்டையும், அதன் உயிர்நாடியான உயிரினங்கள், பறவைகள், மலைகள், ந்திகள், பள்ளத்தாக்குகள், மரங்கள், செடிகொடிகள் ஆகியவற்றை அப்படியே விட்டுச் செல்லுங்கள். அது ஒன்றே நம் நாட்டைப் பெருமைக் கொள்ளவைக்கும்."
- வேங்கை பெரிய மனது படைத்த கனவான். அது எல்லையற்ற துணிச்சல் மிக்கது. பொதுமக்களின் அபிப்பிராயம் திரண்டு, அதை ஆதரிக்காவிட்டால், இந்தியா தன் விலங்கினங்களிலேயே, மிக உன்னதமான ஒன்றை இழந்துவிடும்.[1]
- எனக்கு என்ன நேருமோ என்ற அச்சத்தினாலோ, எனக்கு அரிதாக கிடைத்த ஒரு வாய்ப்பை இழந்து விடுவேனோ என்ற பரபரப்பாலோ, அது என்ன காரணமாக இருந்தாலும் சரிதான். நான் அந்த ஆட்கொல்லியைத் தூக்கத்திலிருந்து எழுப்பாமல் போய்விட்டேன். போர் அறத்தின்படி அதற்கு ஒரு வாய்ப்பு வழங்காமல் போனது என் மனதை இன்னும் உறுத்திக் கொண்டே இருக்ககிறது. -மோகன் ஆட்கொல்லி குறித்து[1]
- இந்தியாவிலேயே அதிகம் வெறுக்கபட்ட அந்த சிறுத்தை செய்த ஒரே குற்றம் - இயற்கை சட்டத்துக்கு எதிரானதல்ல. ஆனால் மனிதனின் சட்டத்துக்கு எதிரானது -அது மனிதர்களின் இரத்தம் சிந்தக் காரணமாக இருந்தது என்பதுதான். மனிதர்களைக் கொல்லவேண்டும் என்ற நோக்கமெல்லாம் இல்லை. இயலாமையால் தன் பசியைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் அது மனிதர்களைக் கொன்றது. -ருத்ரபிராயகையின் ஆட்கொல்லிச் சிறுத்தைக் குறித்து[1]
- இந்தப் புலி ஆட்கொல்லியாக மாறிவிடும் என்று தவறாக நினைத்து அதைச் சுட்டுக் கொன்றுவிட்டேன். அதற்கு ஏற்கனவே ஏற்பட்ட காயங்களை பரிசீலித்ததில், அந்தக் காயங்கள் அனேகமாக ஆறிப்போயிருந்ததைக் கண்டேன். என்னுடைய தவறான கருத்தின் காரணமாக அதைக் கொன்றுவிட்டதை நினைத்து வருந்தினேன். அடித் தொண்டையில் அது கத்தியழைக்கும் குரல், குன்றின் அடிவாரமெல்லாம் எதிரொலிப்பதைக் காட்டு விலங்குகளும், நானும் இனி எப்போது கேட்கப் போகிறோம். அதுவும் நானும் பதினைந்து ஆண்டு காலமாக நடந்து பழகிய வேட்டைத் தடங்களில், எனக்குப் பரிச்சயமான அதன் காலடிச் சுவடுகளை இனி எப்போது காணப் போகிறேன்.பாபல் பானி வேங்கை குறித்து[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 ஏப்ரல் 19: ஜிம் கார்பெட் பிறந்தநாள் (in ta).