ஜான் ஹோல்ட்
ஜான் கால்டுவெல் ஹோல்ட் ஒரு அமெரிக்க கல்வியியலாளர், எழுத்தாளர், குழந்தைகளின் உரிமைகள் பற்றிய கருத்தாக்கத்தைத் துவக்கியவர்களுள் முக்கியமானவர்.
மேற்கோள்கள்
தொகு'குழந்தைப் பருவத்திலிருந்து தப்புதல்' (Escape From Childhood) எனும் இவரது நூலில் இருந்து எடுக்கப்பட்டவை இந்த மேற்கோள்கள்.
- இன்றைய குழந்தை வளர்ப்பு முறை மத்தைய தர வர்க்கத்தின் 'பணம் ஈட்டும் வெறி'யை மையமாகக் கொண்டு இயங்குகிறது.
- தனது வருங்காலத்திற்கான முதலீடாக மூலதனமாக எதிர்கால வருமானமாக தனது குழந்தையைப் பெற்றோர்கள் பார்க்கிறார்கள்.
- இன்றைய பெற்றோர் தங்களது குழந்தையை ஒரு அசாதாரண வளர்ப்புச் செல்லப் பிராணியாகக் கருதுகின்றனர்.