ஜப்பானிய பழமொழிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இப்பக்கத்தில் ஜப்பானிய பழமொழிகள் தொகுகப்பட்டுள்ளன.
- இளம் மனைவி தன் வீட்டில் நிழலாகவும், எதிரொலியாகவுமே இருக்க வேண்டும்.
- உன் தாயின் கண்கள் அவளைக் கவனிக்கும்வரை நீ ஒரு பெணணை நம்பலாம்.
- உன்னிடம் ஏழு பிள்ளைகள் பெற்றிருந்தாலும், அந்தப் பெண்ணை நம்ப வேண்டாம்.
- காதலன் கண்ணுக்கு அம்மைத் தழும்புகளும் அதிருஷ்டக் குறிகளாகும்.
- கோழிதான் சேவலைக் கூவச் சொல்லுகிறது.
- நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்குச் சமானம்.
- நாவுதான் பெண்ணுக்கு வாள், அது துருப்பிடிப்பதேயில்லை.
- தீய மனைவி அறுபது வருடமாய்த் தீய்ந்து போகும் பயிருக்குச் சமானம்.
- பத்து வயதில் விசித்திரக் குழந்தை, பதினைந்தில் கெட்டிக்கார இளைஞன், இருபதில் சாதாரண மனிதன்.
- புண்ணும் கட்டியும் எங்கு வேண்டுமானாலும் உண்டாகும்.
- மனைவியரும் பாய்களும் வந்த புதிதில் சிறப்பா யிருப்பவை.
- மனைவியின் மூன்று அங்குல நீளமுள்ள நாக்கு ஆறு அடி உயரமுள்ள மனிதனைக் கொல்ல முடியும்.
- மாமியாருக்கு மரியாதை காட்டினால், தினமும் மூன்று முறை உன் வீட்டுக்கு வருவாள்.
- வயதான பின்பு உன் குழந்தைகளுக்குப் பணிந்து நட
- வாழ்க்கை காற்றின் நடுவிலுள்ள ஒரு தீபம்.
- வாழ்க்கை என்பது அன்பும் மனைவியும்.
- விவாகமான பெண்கள் அனைவரும் மனைவியர் ஆகமாட்டார்.