மக்களாட்சி
(ஜனநாயகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மக்களாட்சி அல்லது சனநாயகம் என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்ற அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறையை கூறினார்.
- ஜனநாயகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாதது போல் தோன்றுகிறது. ஏனெனில், அது சரித்திரத்தில் மிகப் புராதனமான போக்கு. மிகவும் நிலையானது. பெரும்பாலோர் வேற்றுமையின்றி ஏற்றுக்கொள்ளக்கூடியது. -டி. டாக்புவில்லி[1]
- அமெரிக்காவின் உண்மையான ஜனநாயகக் கருத்து என்ன வெனில், ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவரைப் போலச் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், ஒவ்வொருவரும் கடவுளால் படைக்கப்பெற்ற நிலையில் இருப்பதற்குத் தடையற்ற சுதந்தரம் இருக்கவேண்டும் என்பதே. - பீச்சர்[1]
- ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்களுக்குரிய பிரச்சினையன்று. ஜவஹர்லால் நேரு[1]
- பூரண அரசியல் ஜனநாயகம் என்பதன் பொருள் பொருளாதார ஜனநாயகமாக வளர்ச்சியடைதல் என்று பொதுவாகச் சொல்லி விடலாம். -ஜவஹர்லால் நேரு[1]