சௌகார் ஜானகி
சௌகார் ஜானகி தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.
இவரது கருத்துகள்
தொகு- என் குழந்தைகளின் நலனுக்காகவே கலைத்துறைக்கு வந்தவள் நான். என்னையும் என் குழந்தைகளையும் பெருமைப்படுத்தியது கலை உலகம். ஆக, தாயாக இருப்பது, கலை உலகில் புகழ் பெறுவது இரண்டுமே எனக்குப் பெருமைதான்.[1]
- ஏராளமான குழந்தைகளைப் பெறுவதைவிட சில குழந்தைகளோடு கட்டுப்படுத்தி, அவர்களுக்குப் போதுமான உணவு, துணிமணி, மற்ற வசதிகளைச் செய்து தருவதே நல்லது. — (18-12-1960)[2]
- கடவுள் ஒருவனைப் பணக்காரனாகவோ, ஏழையாகவோ படைக்கவில்லை. எல்லோரையும் ஒரே கோலத்தில்தான் கடவுள் படைக்கிறான். மனிதன் பணக்காரனாவதும் ஏழையாவதும் புத்திசாலித்தனத்தையோ, திறமையையோ தான் பொறுத்தது. சிலர் அதிர்ஷ்டம் என்றும் அதைச் சொல்லுவார்கள்.[3]
குறிப்புகள்
தொகு- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 111-120. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.