சேற்றில் மனிதர்கள்

சேற்றில் மனிதர்கள் (1982) என்பது ராஜம் கிருஷ்ணனின் நாவலாகும். இது ஒரு பாரதிய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல் ஆகும்.

  • சொட் சொட்டென்று முற்றத்தில் சான நீர் விழும் ஒசைதான் சம்முகத்தைத் துயிலெழுப்புகிறது.
    • அத்தியாயம் 1 (வரப்புயர... குடியுயர....), பக்கம் 7
  • "எந்திரிச்சிட்டீங்களா? ராவெல்லாம் துரங்கவேயில்ல, இன்னிக்கு எப்படி ஐயா உன்னைக் கூட்டிட்டுப் போவாரு நீ வானா அண்ணனைக் கூட்டிட்டுப் போன்னு இப்பதா காந்திகிட்டச் சொன்னேன்.
    • அத்தியாயம் 1 (வரப்புயர... குடியுயர....), பக்கம் 7
  • பின் தாழ்வாரத்தில் இருந்த கோழிக் கூண்டைத் துக்கிவைத்து பெட்டையையும் ஆறு நோஞ்சான் குஞ்சுகளையும் விடுதலை செய்கிறாள்.
    • அத்தியாயம் 1 (வரப்புயர... குடியுயர....), பக்கம் 10
  • அதிலிருந்து வரும் பாட்டு ஒரே கத்தலாக இருக்கிறது. தனது தட்டல் உள்ளே இருக்கும் மருமகளுக்குச் செவியில் விழுமா என்ற ஐயத்துடன் சற்றே ரேடியாவை நிறுத்து என்று சொல்லும் பாவனையில் பார்க்கிறார்.
    • பக்கம் 165
  • "அப்படி எல்லாம் இல்ல சாம்பாரே, நமக்கு சாட்சி இருக்கு சத்தியம் எப்பவுமே அநாதயாயிராது!"
    • பக்கம் 236

வெளியிணைப்புகள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
wikisource
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சேற்றில்_மனிதர்கள்&oldid=12579" இலிருந்து மீள்விக்கப்பட்டது