செர்பிய பழமொழிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இப்பக்கத்தில் செர்பிய பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
- அதிருஷ்டத்தில் உயர்ந்தது நல்ல கணவன் வாய்ப்பது, அடுத்தது நல்ல வேலைக்காரன் வாய்ப்பது.
- ஒரு சகோதரிக்குக் கலியாணமானால், அடுத்தவளுக்கும் ஆகும். ஒரு தொட்டி விற்றால், அடுத்ததும் விலையாகும்.
- ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு சொல்வதைப் பார்க்கினும் ஓர் ஆலயத்தை எரிப்பது குறைந்த பாவம்.
- என்னை என் குடும்பத்திலிருந்து காப்பாற்றுங்கள்; என் எதிரிகளை நானே பார்த்துக் கொள்கிறேன்.
- காதலுக்கும் செல்வத்திற்கும் துணை வேண்டியதில்லை.
- கிழவியும் சயித்தானும் எப்பொழுதும் கூடியே யிருப்பார்கள்.
- கெட்ட பெண்ணையும் புகழ்ந்து பேசு; நல்லவளைப் பற்றி எப்படியும் பேசலாம்.
- சில சமயங்களில் அறிவுள்ள மனைவியின் சொல்லையும் கேட்டு நடக்கலாம்.
- தரையை வைத்து வீடு கட்டப் பெறுவதில்லை, ஒரு பெண்ணை வைத்தே கட்டப் பெறுகின்றது.
- பெண்ணின் காதல் சயித்தானின் வலை.
- மனிதனுக்குச் சந்தோஷம் இரு தடவைகள் வரும்: ஒன்று மனைவியை அடையும் பொழுது, மற்றது அவளைப் புதைக்கும் பொழுது.
- மனைவி இன்றியமையாத ஒரு தீமை.
- வீட்டைவிட்டு ஓடுபவன் வீட்டுக்கே திரும்பி வருவான்.