சூழலியல்

உயிரிகளின் உறவு குறித்த அறிவியல் படிப்பு

"சுற்றுச்சூழல்" தொடர்பான பல சூழலியல் அறிஞர்களின் கருத்துகள் இங்கு மேற்கோளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  • இருபதாம் நூற்றாண்டு ”இசம்”களிலேயே சுற்றுச்சூழலுக்கு தீமை பயப்பது டூரிசம் தான். - ஆகா கான்
  • மனிதர்கள் இல்லாமல் பறவைகளால் வாழ்ந்துவிட முடியும். பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது. - சலீம் அலி
  • இயற்கையைப் பராமரிக்க மனிதருக்கு கற்றுக்கொடுக்க ஒரே வழி, அவர்கள் குழந்தையாக இருக்கும் போதே இயற்கையைப் புரிய வைப்பதுதான். - கான்ராட் லாரன்ஸ்
  • இந்த உலகம் பூச்சிகளின் உலகம் தான். அதில் மனிதரும் வசிக்கின்றனர்.
  • சிற்றுயிர்களைப் புறக்கணிப்பவன் சிறிது சிறிதாக வீழ்வான். - சாலமோன் ராஜா.
  • மக்களது நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் இல்லாமல் வனத்தையோ அல்லது அதில் வாழும் காட்டுயிர்களையோ பாதுகாக்க முடியாது.
  • ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. பூமியோ என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறது.
  • நம்மில் பலர், புற உலகு என்று ஒன்று இல்லாதது போலவே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். - கார்ல் சேகன்.
  • தாவரவியலைச் செடி, கொடிகள் மூலம்தான் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். புத்தகங்கள் மூலம் அல்ல.
  • சிவில் இஞ்சினியர்களின் கையில் இந்தியாவின் நீர் மேலாண்மையைக் கொடுப்பது, சில தச்சர்களை விட்டு இதய அறுவை சிகிச்சை செய்ய சொல்வதற்கு ஒப்பாகும். - பிட்டு செகல்
  • வறுமை தான் உலகை மாசுபடுத்துகிறது. - இந்திராகாந்தி
  • சாலைகள், ஆக்டோபசின் தும்பிக்கைகள் போல நம் காடுகளுக்குள் நீண்டிருப்பதை நான் வருத்தத்துடன் காண்கிறேன். - உல்லாஸ் கரந்த்
  • பருவநிலை மாறுதல்களின் விளைவை உணர்ந்ததில் நாம்தான் முதல் தலைமுறையாக இருக்கிறோம், அதைச் சரிசெய்யக்கூடிய கடைசித் தலைமுறையாகவும் நாம்தான் இருக்கிறோம். - வாஷிங்டன் மாநில கவர்னர் ஜே இன்ஸ்லீ
  • சுற்றுச்சூழல் மீது நாம் அக்கறை கொள்வது நமக்காக மட்டுமல்ல, வருங்கால சந்ததிக்காகவும் தான்.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் சூழலியல் என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சூழலியல்&oldid=9379" இலிருந்து மீள்விக்கப்பட்டது