சுவாமி ராமகிருஷ்ணானந்தர்
சுவாமி ராமகிருஷ்ணானந்தர், சுவாமி விவேகானந்தரின் சகோதரச் சீடரும், குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடரும் ஆவார். இவர் சசி மகராஜ் என்று அழைக்கப்படுகிறார். சுவாமி விவேகானந்தரால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்.
சிந்தனைத் துளிகள்
தொகு- ஒருவேளை, பேனாவிற்கு உயிர் இருப்பதாக வைத்துக் கொள்வோம்; அப்போது, அது ’நான் நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதியிருக்கிறேன்’ என்று கூறக்கூடும். உண்மையில், அது எதுவும் செய்ததில்லை, அதனை யார் கையில் வைத்திருந்தார்களோ அவரே கடிதங்களை எழுதினார். அதுபோல் நமக்கு உயிரும் உணர்வும் இருப்பதால் எல்லாவற்றையும் நாம் செய்வதாக நினக்கிறோம். உண்மையில், எப்படி நமது கையில் பேனா ஒரு கருவியாக இருக்கிறதோ அதுபோலவே எல்லாம் வல்ல எம்பெருமானின் கைகளில் நாம் வெறும் கருவி மட்டுமே;அவரே அனைத்தையும் செய்கிறார்.
- உன்னிடமே நீ அதிருப்தி அடையாதே. நீ கடவுளின் பிள்ளை. எனவே உன்னிடம் நீ அதிருப்தி கொண்டால், கடவுளின் குழந்தையிடம் அதிருப்தி கொள்வதாகும். அது கடவுளிடமே அதிருப்தி கொள்வதாகும். அது நல்லதா?
- உன்னை மாற்றிக்கொள்ள எந்தக் கணமும் தயாராக இருக்க வேண்டும். இல்லாவிடில் உண்மையை அடைய முடியாது. ஆனால் உண்மையை அடைய வேண்டும் என்ற முயற்சியில் உறுதியாக இருக்க வேண்டும்.