சுற்றுச்சூழல்
உயிர்கள் வாழ ஏற்ற இடம்
சுற்றுச்சூழல் என்பது குறிப்பிட்ட ஒரு பொருளை அல்லது உயிரினத்தைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலைச் சிறப்பாகக் குறிக்கின்றது.
சுற்றுச்சூழல் போராளிகளின் மேற்கோள்கள்
தொகு- பூமிக்குப் பிரச்சினைகளைக் கொடுக்கும் மனிதர்கள்தான், பிரச்சினைகளுக்கான தீர்வையும் கொடுக்க வேண்டும். -ஜூலியா பட்டர்பிளை ஹில், அமெரிக்கா
- பகுத்தறிவு, விடாமுயற்சி, காரியத்தில் உறுதி, பொறுமை இருந்தால் உலகத்தை மாற்றலாம். - லோயில் கிப்ஸ், அமெரிக்கா
- நீங்கள் தோள்களில் சுமந்து செலவதற்கு உலகம் வரைபடமல்ல, உலகம்தான் உங்களைச் சுமந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். - வந்தனா சிவா, இந்தியா
- பல்வேறு விதங்களில் பூமியைச் சிதைத்து வருகிறோம் இதைப் புரிந்துகொண்டு, அக்கறையோடு உடனே பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும். - ஜேன் குட்டால், இங்கிலாந்து
- மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு, இயற்கைமீதே போர் தொடுத்தால், அவன்மீது போர் தொடுக்கிறான் என்று அர்த்தம். - ரோச்சல் கார்சன், அமெரிக்கா.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ தி இந்து பெண் இன்று இணைப்பு 2016, திசம்பர் 18