சுப்பிரமணிய பாரதியார்
கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி
சுப்பிரமணிய பாரதியார் (சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி) (திசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
மேற்கோள்கள்
தொகு- ''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்''.
- பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்.[1]
- கவலையும், பயமும் எனக்கு பகைவர். நான் இப்பகைவரை வென்று தீர்த்தேன். அதனால் மரணத்தை வென்றேன். நான் அமரன்.
- ஆழ்ந்த நினைப்பு, அசையாத நினைப்பு, வலிய நினைப்பு, மாறாத நினைப்பு விரைவில் உலகம் அறியத்தக்க வெளியுண்மையாக மாறிவிடும்.
- செய்வதைத் துணிந்து செய்
- ஜாதி மதங்களைப் பாரோம் -
- உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
- வேதிய ராயினும் ஒன்றே -
- அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே.
- கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி.
- நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த
- நிலை கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்
- நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.
- சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத் தொழுது படித்தடடி பாப்பா.
- இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை.
- சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்!
வெளி இணைப்புக்கள்
தொகு
- "Subramaniya Bharathi" at Tamilnation.org
- The People's Poet
- Profile at Made In Thoughts
- Poet Nightingale Bharathiyar, by Kavi Yogi Dr. Shuddhananda Bharati
- Selected Bharathi Poems (in Tamil with links to English translations)
- Bharathiyar Song at YouTube
- Bharathiyar Song at YouTube
- Bharathi Songs (in Tamil)
- Complete Works of Maha Kavi Subramaniya Bharathy (in Tamil)
- Works of Bharati (in Tamil)
- Poetry of Subramanya Bharathi in Punjabi at punjabi-kavita.com